உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய சில கிரீன் பவுடர் (Green Powder) குறித்து இங்கு காணலாம்.
நாம் சரிவிகித உணவு எடுத்து கொள்ளாவிட்டால் நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். இந்த மாதிரி சமயங்களில் மார்க்கெட்டுகளில் வாங்கும் சில கிரீன் பவுடர்கள் அந்த இடைவெளியை போக்குகின்றன. கிரீன் பவுடர்கள் ஆற்றலை அதிகரிக்கும், அத்துடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மேம்பாட்டிற்கும் உதவுகின்றன. கீரைகள், கடற்பாசி, புற்கள், காய்கறிகள், தாவரங்களின் இலைகள், ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமுள்ள பழங்கள், மூலிகைச்சாறு போன்றவை கொண்டு கிரீன் பவுடர் தயார் செய்யப்படும். இது பிராண்டுகளுக்கு ஏற்ப மாறும். நாள்தோறும் கீரை எடுத்து கொள்ள விரும்புவர்கள் இந்த கிரீன் பவுடரை உண்ணலாம். தற்போது சந்தைகளின் இந்த பவுடர்கள் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. ஆனாலும் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அதிகபடியான பலன்களை பெற சில கிரீன் பவுடரை இங்கு பரிந்துரை செய்துள்ளோம்.
கோதுமையில் உள்ள ஊட்டச்சத்து..
சைவ உணவு எடுத்து கொள்பவர்களுக்கு, இயற்கை பலன்களை அள்ளி தரும் கார்டன் ஆஃப் லைப் ரா ஆர்கானிக் பெர்பெக்ட் புட் கிரீன் சூப்பர்ஃபுட் (Garden of Life Raw Organic Perfect Food Green Superfood) ஏற்றது. இதில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படவில்லை. இதனை கோதுமை, பார்லி போன்ற இயற்கை உணவுகளின் ஊட்டச்சத்து நிரம்பி காணப்படுகிறது.
ஓரா ஆர்கானிக் (Ora Organic)
இந்த பவுடர் இயற்கை முறையில் தயாரானது. சிட்ரஸ் சுவையுடன், பல தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. பசையம் மற்றும் பால் இல்லாதது, இது நன்கு சீரான உணவுக்கு சிறந்த சேர்த்தல்களில் ஒன்றாகும். மஞ்சள், அஸ்வகந்தா, கார்டிசெப்ஸ், குளோரெல்லா, ஸ்பைருலினா உள்பட பல ஊட்டச்சத்துக்களால் இந்த பவுடர் நிரம்பியுள்ளது. இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அன்றாட உணவில் கிடைப்பது ஒப்பீட்டளவில் கடினமாக இருக்கும். இந்த பொடி தர்பூசணி, புதினா போன்ற பல்வேறு ப்ளேவர்ஸில் வருகிறது. இதனை வெறும் தண்ணீரில் சேர்த்துக் குடித்தால் கூட போதும்.
சுவையான பொடி
ஸ்பைருலினா, கோதுமை புல், குளோரெல்லா, ஓட்ஸ் புல், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய பொருள்களால் செய்யப்பட்ட பொடிகளில் KOS ஷோ மீ தி கிரீன்ஸ் பவுடர் (KOS Show Me the Greens Powder) ஒன்றாகும். இதில் புதினாவுடன் ஆப்பிள், எலுமிச்சம்பழம் போன்ற பழங்களைச் சேர்ப்பதால் சுவையாகவும் இருக்கும்.
புளித்த கீரை பவுடர்...
பல நம்ப முடியாக பலனளிக்கும் கிரீன் பவுடரில், 'டாக்டர். மெர்கோலா ஆர்கானிக் புளிக்க வைக்கப்பட்ட கீரை' பொடியும் ஒன்றாகும். ஓட்ஸ், பார்லி, கோதுமை ஆகிய இயற்கை பொருள்களில் தயாரானது. பாசிகள், மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் சுவை பச்சை தேயிலை போல இருக்கும். ஒரு டீஸ்பூன் தூள் ஊட்டச்சத்து அளவை கணிசமாக கூட்டும்.
இதையும் படிங்க: மாத்திரைகள் இல்லாமல் பல நோய்களை குணமாக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்...
கிரீன் பவுடர்கள் அமினோ அமிலங்கள், நியூக்ளிக் அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள், நார்ச்சத்துகள், கரோட்டினாய்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை அதிகமாக கொண்டுள்ளன. செரிமான அமைப்பை மேம்படுத்துதல், ஆற்றல் அளவை அதிகரிப்பது, நோய்களுக்கு எதிராக உங்கள் உடலைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு இந்த பவுடர் உதவும். பச்சை நிற காய்கறிகள், கீரைகள் போன்றவற்றின் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்ய இவை உதவும்.
இதையும் படிங்க: மயிலிறகை வீட்டில் வைப்பது நல்லதா? கெட்டதா? புராணங்கள் சொல்லும் உண்மை தெரியுமா?