கிராமத்து ஸ்டைலில் இப்படி ஒரு முறை முட்டை குழம்பு செய்து பாருங்க... சூப்பரா இருக்கும்..!

Published : Jul 12, 2024, 02:53 PM ISTUpdated : Jul 12, 2024, 03:10 PM IST
கிராமத்து ஸ்டைலில் இப்படி ஒரு முறை முட்டை குழம்பு செய்து பாருங்க... சூப்பரா இருக்கும்..!

சுருக்கம்

Village Style Egg Kulambu : இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் முட்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

கோழி, மட்டன், மீன் ஆகியவற்றைத் தவிர, அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மற்றொன்று முட்டை. முட்டை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நீங்கள் உங்கள் வீட்டில் முட்டையில் எப்போதும் போல குழம்பு செய்யாமல்,  ஒரு முறை கிராமத்து ஸ்டைலில் முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். டேஸ்ட்டா இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு ரொம்பவே ஈசியா இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இந்த முட்டை குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் முட்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

கிராமத்து ஸ்டைலில் முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை - 3
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு  - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  வீடு மணக்க, கை மணக்க செட்டிநாடு முட்டை குழம்பு; செஞ்சு அசத்துங்க!!

தாளிப்பதற்கு...

பட்டை - 1 (சின்னது)
கிராம்பு - 1
கருவேப்பிலை - சிறிதளவு

மசாலா அரைப்பதற்கு...

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4
இஞ்சி - 1/2
மல்லி - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்

இதையும் படிங்க:  ஒருமுறை முட்டை பெப்பர் கிரேவி இப்படி செய்ங்க.. சூப்பரா இருக்கும்! இந்த டேஸ்ட்ட மறக்கவும் மாட்டீங்க..

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை வேகவைத்து, பிறகு அதன் ஓட்டை பிரித்து, நீள்வாக்கில் இரண்டாக வெட்டி, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில், தேங்காய் துருவல், பூண்டு, இஞ்சி, மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து, பிறகு ஆற வையுங்கள். அவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் வேறொரு கடையை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடுங்கள்.

பின் அதில் கரம்மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டையை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து, பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை அதன் மேல் தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கிராமத்து ஸ்டைலில் முட்டை குழம்பு தயார். சூடான சாதத்திற்கு இந்த முட்டை குழம்பை ஊற்றி சாப்பிடுங்கள். சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Fake Dates Alert: விலை குறைவு என்று வாங்காதீங்க.! பேரிச்சம்பழம் அசலா, தரமற்றதா? கண்டுபிடிக்க இந்த 7 விஷயங்களை பாருங்க!
Joint Pain: மூட்டு வலியை விரட்டணுமா? கண்டிப்பா சாப்பிட வேண்டிய 7 உணவுகள் இதோ!