10 நிமிடத்தில் டேஸ்டான இஞ்சி சட்னி.. இப்படி ஒரு முறை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

Published : Jul 12, 2024, 07:00 AM IST
10 நிமிடத்தில் டேஸ்டான இஞ்சி சட்னி.. இப்படி ஒரு முறை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

சுருக்கம்

Inji Chutney Recipe  : இந்த கட்டுரையில் இஞ்சி சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி தோசை செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு சைடிஸ் ஆக எப்போதும் போல வைக்கும் சட்டினியை வைக்காமல்,ஒரு முறை இஞ்சி சட்டினி செய்து பாருங்கள். இந்த சட்னி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். இந்த இட்லி சட்னியை நீங்கள் சூடான இட்லி, தோசை அல்லது அடை ஆகியவற்றுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும். இது செரிமானம் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த இஞ்சி சட்னி செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க... இப்போது இந்த கட்டுரையில் இஞ்சி சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குட்டீஸ்க்கு பிடிச்ச பொடி இட்லி.. இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

இஞ்சி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1/2 கப்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கருவேப்பிலை - சிறிதளவு
புளி - தேவையான அளவு
வெல்லம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  தோசை மாவு இல்லையா? அப்ப ரவையும் தேங்காயும் வச்சு இப்படி ஒருமுறை தோசை சுட்டு பாருங்க டேஸ்ட்டா இருக்கும்!

செய்முறை:

இஞ்சி சட்னி செய்ய முதலில் எடுத்து வைத்த இஞ்சியை தண்ணீரில் நன்கு கழிவு கொள்ளுங்கள். பிறகு அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இஞ்சி நன்றாக வதங்கியதும் அதில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஆற வைக்கவும். அவை நன்கு ஆர் ஏதும் அவற்றை ஒரு மிக்ஸி சார்பில் சேர்த்து அதனுடன், சிறிதளவு புளிக் கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்த சட்டினியை ஊற்றவும். அவ்வளவுதான் டேஸ்ட்டான இஞ்சி சட்னி ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்
Dark Chocolate: சொன்னா நம்பமாட்டீங்க.! டார்க் சாக்லேட் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?