காளானில் இப்படி ஒரு முறை ப்ரை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்.. ரெசிபி இதோ!

Published : Jul 11, 2024, 02:39 PM ISTUpdated : Jul 11, 2024, 02:50 PM IST
காளானில் இப்படி ஒரு முறை ப்ரை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்.. ரெசிபி இதோ!

சுருக்கம்

Mushroom Pepper Fry Recipe : இந்த கட்டுரையில் மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

மதியம் சூடான சாதத்திற்கு ஏதாவது வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் காளான் இருந்தால் அதில் பெப்பர் ஃப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை காரசாரமான சுவையில் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: குக்கரில் குழையாமல் டேஸ்ட்டான காளான் பிரியாணி... 10 நிமிடத்தில் செய்திடலாம்..!

மஸ்ரூம் பெப்பர் ப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

காளான் - 1 கப் (நறுக்கியது)
மிளகு - 1 ஸ்பூன்
குடைமிளகாய் - 1/2 (நீளமாக வெட்டியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக வெட்டியது)
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  கோழி குழம்பு சுவையில் காளான் குழம்பு... ஒரு முறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க..

செய்முறை:

மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை செய்ய முதலில் ஒரு காடாயை அடுப்பில் வைத்து அதில் மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் நல்ல மனம் வரும் வரை வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதே காடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அதில் காளானையும் சேர்த்து நன்கு வதக்கவும். காளானில் இருந்து தண்ணீரை வெளி வந்ததும், அதில் மிளகுத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள். அடுப்பை குறைவான தீயில் வைத்து வதக்கிக் கொண்டே இருங்கள். பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான மஸ்ரூம் பெப்பர் ப்ரை தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

ஆரோக்கியமான இதயத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்: ஒரு எளிய வழிகாட்டி
Health Drink: கோடையில் உடலை காப்பது எப்படி? மோரின் 6 அற்புத நன்மைகள்.! இது தெரியாம போச்சே.!