Coconut Rava Dosa : இந்த பதிவில் ரவை தேங்காய் தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று உங்கள் வீட்டில் தோசை சுடுவதற்கு மாவு இல்லையா? காலை டிபனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா..?உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், உங்கள் வீட்டில் ரவையும், தேங்காயும் இருந்தால், இந்த இரண்டு பொருட்களுடன் சில பொருட்களை மட்டும் சேர்த்து அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம் தெரியுமா..?
மேலும், இந்த ரவை தேங்காய் தோசை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், செய்வதற்கு எளிதாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தோசை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் ரவை தேங்காய் தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: வித்தியாசமான சுவையில் சத்தான புதினா கொத்தமல்லி தோசை.. ரெசிபி இதோ..!
ரவை தேங்காய் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தேங்காய் - 3/4 கப் (துருவியது)
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
கேரட் - 1 (துருவியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: 15 நிமிடத்தில் சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்லது..!
செய்முறை:
ரவை தேங்காய் தோசை செய்ய முதலில் மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்த ரவை, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அரைத்த அந்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு கட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு மாவை நான்கு கலந்து கொள்ளுங்கள் பிறகு அதை மூடி வைத்து சுமார் பத்து நிமிடம் ஊற வையுங்கள்.
பத்து நிமிடம் கழித்து தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ,அதில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஒரு கரண்டி அதில் சற்று தடிமனாக ஊற்றுங்கள். பிறகு அதன் மேல் துருவிய கேரட் மற்றும் தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மூடியை வைத்து மூடி வையுங்கள். பின் இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான தேங்காய் ரவை தேங்காய் தோசை ரெடி..இந்த தோசையுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, குருமா என இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D