பீட்ரூட்டில் இப்படி ஒரு முறை ஊத்தப்பம் செய்ங்க.. டேஸ்ட் வேற லெவல்..!

By Kalai Selvi  |  First Published Jul 9, 2024, 5:30 AM IST

Beetroot Uttapam Recipe : இந்த கட்டுரையில் சத்தான பீட்ரூட் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


தினமும் உங்கள் வீட்டில் காலை இட்லி தோசை தான் செய்கிறீர்களா..? உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி தோசை சாப்பிட்டு போரடித்து விட்டதா..? அப்படியானால் அவர்களுக்கு வித்தியாசமான சுவையில் ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது.

ஆம், உங்கள் வீட்டில் பீட்ரூட் இருக்கிறதா? அப்படியானால் இதனுடன் இட்லி/தோசை மாவுடன் சுவையான பீட்ரூட் ஊத்தப்பம் செய்து சாப்பிடுங்கள். இந்த ஊத்தப்பம் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ஊத்தப்பம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் பீட்ரூட் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: வித்தியாசமான சுவையில் சத்தான புதினா கொத்தமல்லி தோசை.. ரெசிபி இதோ..!

பீட்ரூட் ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி/தோசை மாவு - 2 கப்
சின்னது பீட்ரூட் - 2
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
கேப்ஸிகம் - 1(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  காய்கறிகள் சாப்பிட குட்டிஸ்கள் அடம்பிடிக்குதா? அப்போ 'இப்படி' செஞ்சு கொடுங்க.. தட்டு காலியாகும்!

செய்முறை:

பீட்ரூட் ஊத்தப்பம் செய்ய முதலில் பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எடுத்து வைத்த இட்லி/தோசை மாவு ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் துருவி துருவிய பீட்ரூட்டையும் சேர்த்து நன்றாக கலக்குங்கள் மாவு அதிகமாக கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தோசை விட மாவு கொஞ்சம் தடிமனாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றி வழக்கமாக ஊத்தப்பம் போல் ஊற்றவும். பிறகு ஊத்தப்பம் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மாவின் மேல் லேசாக கரண்டியை வைத்து அழுத்தி விடுங்கள். பின் அதன் மேலும் சிறிதளவு உப்பையும் தூவி விடுங்கள்.

பிறகு மாவை சுற்றி எண்ணெய் ஊற்றி விடுங்கள். பிறகு தோசை முடியால் அதை சிறிது நிமிடம் மூடி வைக்கவும்.. ஊத்தப்பம் வெந்ததும் அதை மறுபுறமும் திருப்பி போட்டு வேக வைக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சபையில் ஆரோக்கியமான பீட்ரூட் ஊத்தப்பம் ரெடி. இதன் மேல் நீங்கள் பொடியாக நறுக்க கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கலாம். மற்றும் இதனுடன் நீங்கள் தேங்காய் சட்னி சாப்பிடால்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!