Iyengar Style Vatha Kulambu Recipe : ஐயர் வீட்டு வத்த குழம்பை நம்முடைய வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வத்த குழம்பு என்றாலே பலரது நாவிலும் எச்சில் ஊறும். அதுவும் ஐயர் வீட்டு வத்த குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு ருசியாக இருக்கும். ஐயர் வீட்டு சமையலில் ஸ்பெஷல் ரெசிபியில் வத்த குழம்பும் அடங்கும். ஐயர் வீட்டு ஒத்த குழம்பு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அவர்கள் எப்படி அவ்வளவு ருசியாக செய்கிறார்கள் என்று நீங்களும் தெரிஞ்சுக்க விரும்பினால், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்..
ஐயர் வீட்டு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
வெந்தயம் - 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
வர மிளகாய் - 4
அரிசி - 1 ஸ்பூன்
இதையும் படிங்க: பன்னீரில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்.. ரெசிபி இதோ!
தாளிக்க...
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
இதையும் படிங்க: நாவூறும் சுவையில் மாங்காய் சாம்பார்.. ரெசிபி இதோ..!
குழம்பிற்கு...
சுண்டைக்காய் - 1 கப்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 10
வெல்லம் - சின்னது
கருவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஐயர் வீட்டு வத்த குழம்பு செய்யும் முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த வெந்தயத்தை சேர்த்து வறுத்து, பின் பொடியாக அறைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் வரமிளகாய், மிளகு, அரசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்து பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி, பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும் பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் எடுத்து வைத்த சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரைத்து வைத்த வெந்தய பொடிவையும் சேர்த்து கிளறி விடுங்கள்.
பிறகு அதில் ஏற்கனவே தயாரித்து வைத்த புளி சாற்றை சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். பின் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு ஒரு முறை கிளறிவிட்டு, பின் அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடுங்கள். இறுதியாக அதன் மேல் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஐயர் வீட்டு வத்த குழம்பு தயார்..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D