Vazhaithandu Poriyal Recipe : இந்த கட்டுரையில் வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
வாழைத்தண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, சிறுநீரக கற்கள் ஏற்படுவதை இது தடுக்கும். எனவே, வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அந்த வகையில் இன்று வாழைத்தண்டை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பொரியல் சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும் சரி வாங்க இப்போது வாழைத்தண்டு பொரியல் செய்யும் முறை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: மதியம் லஞ்சுக்கு சூப்பரான சைட் டிஷ்- கல்யாண வீட்டு "வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்"!
undefined
வாழைத்தண்டு பொரியல் செய்ய தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - 1
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
பாசிப்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: வாழைக்காய் வைத்து பஜ்ஜியே செய்யாதீங்க! இப்படி கோலா உருண்டை செஞ்சு கொடுங்க! 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்
செய்முறை :
வாழைத்தண்டு பொரியல் செய்ய முதலில் வாழைத்தண்டில் உள்ளே நாரை நீக்கி அதை நன்கு பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு பாசிப்பருப்பை சுமார் 30 நிமிடம் தண்ணீரில் ஊற வையுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்ததில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் பாசிப்பருப்பை சேர்த்து சுமார் 3 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் வாழைத்தண்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டுங்கள். பின் அதை மூடி வைத்து வேக வைக்கவும் வாழைத்தண்டு நன்கு வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீர் வற்றியதும் துருவி வைத்த தேங்காய் அதன் மேல் தூவி ஒரு முறை கிளறி விடுங்கள் அவ்வளவுதான் டேஸ்டான வாழைத்தண்டு பொரியல் தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D