Godhumai Rava Upma Recipe : இந்த கட்டுரையில் கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று உப்புமா. உப்புமா செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருப்பதால் பல வீடுகளில் இதை தொடர்ந்து செய்வார்கள். குறிப்பாக காலையில் வேலைக்கு அவசர அவசரமாக செய்பவர்களுக்கு மிகவும் எளிதான காலை உணவாக இது இருக்கும். ஆனால் உப்புமா என்றால் பலரது முகமும் சுழியும். இந்நிலையில், நீங்கள் எப்போதும் உப்புமா செய்யாமல் சற்று வித்தியாசமாக கோதுமையும் ரவையும் வைத்து உப்புமா செய்து பாருங்கள். இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் இது ரொம்பவே நல்லது. உப்புமா பிடிக்காதவர்களுக்கு கூட இந்த உப்புமாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காலை டிபனுக்கு 10 நிமிடத்தில் சத்தான ஓட்ஸ் உப்புமா ரெடி..!!
undefined
கோதுமை ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள் :
வறுத்த கோதுமை ரவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்ச மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
நறுக்கியது கேரட், பச்சைப்பட்டாணி - 3/4 கப்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - 3 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: காலையில சத்தான உணவு சாப்பிட விரும்பினால் ராகி மாவில் இந்த டிபன் செய்ங்க... டேஸ்டா இருக்கும்!
செய்முறை :
கோதுமை ரவா உப்புமா செய்ய முதலில், அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கோதுமை ரவாவை சேர்த்து சுமார் இரண்டு நிமிடம் வதக்கவும். ரவையிலிருந்து நறுமணம் வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
இப்போது அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் கேரட், பச்சை பட்டாணி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கோதுமை ரவாவை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் மற்றும் வரை கிண்டி கொண்டே இருங்கள். உப்புமா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான கோதுமை ரவா உப்புமா தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D