Prawn Egg Masala Recipe : இந்த பதிவில் எல்லாரும் விரும்பி சாப்பிடும் ருசியான இறால் முட்டை மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இறால் கடல் உணவுகளில் மிகவும் சுவையானது. அனைத்து வயதினரும் இறால் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் எப்போதும் இறாலில் ப்ரை, கிரேவி தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அப்படி சாப்பிட்டு போரடித்து விட்டால் சற்று வித்தியாசமான சுவையில் இறால் முட்டை மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த இறால் முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் இந்த இறால் முட்டை மசாலா சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க .. இப்போது இந்த பதிவில் இறால் முட்டை மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: EGG Curry Recipe with Simple ingredients ஒருமுறை இப்படி முட்டை குழம்பு செஞ்சு கொடுங்க... தட்டு காலியாகும்!
இறால் முட்டை மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
இறால் - 250 கிராம்
முட்டை - 3
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: சிக்கன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் 'காடை பிரியாணி' .. சூப்பரான டேஸ்ட்... ரெசிபி இதோ!
செய்முறை:
இறால் முட்டை மசாலா செய்ய முதலில் எடுத்து வைத்த இறாலை தன் ஏழில் என்றும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்ந்து அங்கு வதக்கவும். பின் அதில் புடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள்.
பிறகு அதில் கழுவி வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு வதக்கவும். இறால் மசாலாவுடன் சேர்ந்த பிறகு அதை மூடி வைத்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும். பிறகு மூடியை திறந்து இறாலை கடாயின் ஒரு பக்கமாக வைத்து, மறுபக்கத்தில் எடுத்து வைத்த முட்டைகளை ஊற்றி கொள்ளுங்கள். முட்டை நன்கு வெந்ததும் இறால் உடல் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின் அதில் மிளகு தூளையும் தூவி விடுங்கள். பிறகு பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை அதன் மேல் தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் இறால் மூட்டை மசாலா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D