Idli Maavu Bonda : இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்த போண்டாவை இட்லி மாவில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே, மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு. குறிப்பாக, பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக ஏதாவது சாப்பிட கேட்பார்கள். அப்படி அவர்களுக்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியவில்லையா உங்களுக்கான பதிவுதான் இது.
உங்கள் வீட்டில் கடலை மாவு இல்லை என்றால் தோசை மாவு இருக்கிறதா அப்படியானால் அதில் டேஸ்டான எளிதில் செய்யக்கூடிய போண்டா செய்து கொடுங்கள். பொதுவாக போண்டாக்களில் இனிப்பு போண்டா கார போண்டா மசாலா போண்டா என பல வகைகள் போண்டாக்களை நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், நீங்கள் கண்டிப்பாக இட்லி மாவில் செய்த போண்டாவை சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள்.
undefined
இதையும் படிங்க: 1 கப் கோதுமை மாவு இருக்கா..?! டேஸ்டான போண்டா ரெடி! ரெசிபி இதோ...
இந்த இட்லி மாவு போண்டாவுடன் உங்களுக்குப் பிடித்த ஏதாவது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிடுங்கள் டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும். இந்த இட்லி மாவு போண்டாவை உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் இட்லி மாவில் போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உருளைக்கிழங்கில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இப்படி செஞ்சு அசத்துங்க.. ரெசிபி இதோ!
இட்லி மாவு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ரவை - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
போண்டா செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் தோசை மாவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இதில் ரவையையும் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு கடைய அடுப்பில் வைத்து அதில் போண்டா பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் என்னை நன்கு சூடானதும் அதில் தயாரித்து வைத்துள்ள மாவை சின்ன சின்னதாக போண்டாக்களை போடவும். அவற்றை நன்கு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் ருசியான இட்லி மாவு போண்டா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D