Andhra Kara Chutney Recipe : இந்த பதிவில் இட்லி தோசைக்கு காரசாரமான ஆந்திரா கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி தோசைக்கு கார சட்னி செய்யப் போகிறீர்கள் என்றால், எப்போதும் போல செய்யாமல் ஆந்திரா ஸ்டைலில் ஒரு முறை செய்து பாருங்கள். இந்த சட்னி காரசாரமாகவும், புளிப்பாகவும் சாப்பிடுவதற்கு அருமையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வது ரொம்பவே சுலபமானது. இந்த காரச் சட்னி ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள், எக்ஸ்ட்ரா இட்லி தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைலில் கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 1 கப் கோதுமை மாவு இருக்கா..?! ருசியான சுவையில் சத்தான இடியாப்பம் செய்ங்க.. ரெசிபி இதோ..
undefined
ஆந்திரா காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
மல்லி - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 15
புளி - சிறிது (நெல்லிக்காய் அளவு)
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: இன்னைக்கு டிபனுக்கு பூரி செய்ய போறீங்களா? ஒருமுறை 'இந்த' மாதிரி செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
செய்முறை:
இந்திரா ஸ்டைலில் கார சட்னி செய்ய முதலில் எடுத்து வைத்த புலியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கடைய அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு மல்லி ஆகியவற்றை சேர்த்து மணம் வரும் வரை நன்கு வறுக்கவும். பிறகு அதில் வர மிளகாய் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.
இதனை அடுத்து அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் நன்கு மையாக அரைக்கவும். அதில் வதக்கிய வெங்காயம், பூண்டுடன் தேவையான அளவு உப்பு புளி கரைசல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்டினியை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிறிதளவு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் இதை அரைத்து வைத்த சட்னியுடன் சட்டினியுடன் சேர்க்கவும். அவ்வளவுதான் காரசாரமான சுபையில் ஆந்திரா காரச் சட்னி ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D