இந்தியாவில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் நிறைந்து இருப்பதால் பல வகையான உணவுகள் இங்கு ஃபேமசாக உள்ளன. ஒவ்வொரு ஊரில் பல வகையான உணவுகள் பிரபலமாக இருந்தாலும், அனைத்தையும் மிஞ்சி டாப் இடத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவுகளின் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரங்களிலும் உணவுகளின் சுவை மற்றும் சமைக்கப்படும் முறைகள் வித்தியாசமானதாக இருக்கும். . காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை, ஒவ்வொரு இடத்திலும் ஒரு அற்புதமான ருசி பரவி உள்ளது. இந்தியாவின் பிரபலமான 10 நகரங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் பிரபலமான உணவுகள் :
1. டில்லி – பட்டர் சிக்கன் :
டில்லியின் சிக்னேச்சர்! கிரேவி நிறைந்த, வெண்ணெய் துளிர்க்கும் பட்டர் சிக்கன் மற்றும் புல்கா அல்லது நானுடன் கூடிய விருந்துதான் இது.
அது மட்டும் இல்லாமல் சிக்கன் டிக்கா, பஞ்சாபி சாம்ப்ஸும் கூட இங்கு மிகவும் பிரபலமானதாகும்.
2. மும்பை – வடாபாவ் & பாவ்பாஜி
மும்பையின் Street food king என்றே இவற்றை சொல்லலாம். காரசார உருளைக்கிழங்கு பஜ்ஜியை பாவ் பாணியில் வைத்து பரிமாறும் வடாபாவ் – நல்ல டீ ஸ்நாக். அதனுடன் வெண்ணெயில் வதக்கிய பாவ்பாஜியும் சாப்பிடுவதற்கு கூட்டம் அலைமோதும்.
3. கோல்கத்தா – ரசகுல்லா & மச்சர் ஜோல்
இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ரசகுல்லா பிறந்த இடம் கோல்கத்தா ஆகும். இது வாயில் வைத்தாலே கரையும் ஸ்வீட் ஆகும். அதே நேரத்தில், கோல்கத்தாவின் மீன் குழம்பான "மச்சர் ஜோல்" நெஞ்சில் தங்கும் ருசியுடன் இருக்கும்.
4. சென்னை – இடியாப்பம் & தேங்காய் பால்
மென்மையாக இருக்கும் இடியாப்பம் மற்றும் நெய் பூசி ஊற்றப்படும் தேங்காய் பால் சைவர்களுக்கு சொர்க்கம் தான். அசைவ பிரியர்கள் ஆட்டுக்கால் பாயா செய்து சாப்பிடுவார்கள். இது மிகவும் பிரபலமான சுவையாகும். இது தவிர கார விருப்பம் என்றால் சாம்பார், கொழம்பு எல்லாம் கூட சாப்பிடலாம்.
மேலும் படிக்க: ஜப்பானிய ஜிக்லி சீஸ்கேக் வீட்டிலேயே செய்து அசத்தலாம்
5. ஐதராபாத் – ஐதராபாத் பிரியாணி
உலகப் புகழ் பெற்ற ஐதராபாத் பிரியாணி, மசாலா, அரிசி, சிக்கன் அனைத்தும் ஒரே பாத்திரத்தில் சுட சுட, மணக்க மணக்க வாசனை உடன் சாப்பிடலாம்.
இதோடு சேர்த்து சாப்பிடும் சால்னா, ரைத்தா கூடுதல் சுவையாக இருக்கும்.
6. அமிர்தசரஸ் – அம்ரித்தசரி குல்சா
கொஞ்சம் எண்ணெய், கொஞ்சம் வெண்ணெய் ,மசாலா சேர்த்த குல்சா மிகவும் பிரபலமான உணவாகும். புதினா சாஸ் மற்றும் தயிர் டிப்புடன், அம்ரித்தசரி குல்சா பஞ்சாபியின் காலை நேர உணவுகளில் அதிகம் விரும்பும் உணவாக உள்ளது.
7. ஆமதாபாத் டோக்லா
குஜராத்தின் ஹெல்தி ஸ்நாக்: டோக்லா – பாத்திரத்தில் வேக வைத்து பச்சை மிளகாய், சர்க்கரை tempering-இல் கலந்து சாப்பிடும் உணவு தனிச்சுவையாக இருக்கும்.
8. லக்னோ – கல்யாணி கவாப் & ஷர்மா டி ஸ்டால் சாமோசா
அவார்சைட் கவாப் வைக்கும் நம்பர் ஒன் நகரம், லக்னோ. சிக்கன், மட்டன், கோசு என எதிலும் கவாப் செய்வார்கள். டீக்கடை முதல் பெரிய விருந்து வரை இத பிரபலமான உணவாகும்.
9. பெங்களூரு – ரவா இட்லி & பிஸி பிலா பாத்
மாவு அரைத்து புளிக்க வைக்காமல் ரவையை வைத்து இன்ஸ்டன்ட் ஆக செய்யும் இட்லி மிகவும் மென்மையாக, தனித்துவமான சுவையாக இருக்கும். அதோடு பிஸி பிலா பாத் – தேங்காய், மசாலா, பருப்பு ஆகியவை கலந்த சுவையான சாதமாக இருக்கும்.
மேலும் படிக்க: முருங்கைக் கீரை பருப்பு சாதம் - செம ஈஸி, செம ஹெல்தி
10. திருவனந்தபுரம் – அவியல் & கடலைக்கறி
கேரளா சாப்பாட்டுக்கு தனித்துவமான சுவை கூட்டும் உணவுகளில் அவியல் ஒரு பக்கத்திலும், வெள்ளை தேங்காயில் காய்ந்த மிளகாயுடன் கடலைக் கறி மற்றொரு பக்கம் – சட்னி கூட வேண்டாம்னு சொல்லவே மாட்டீங்க.
இந்தியா உணவிலும் கலாசாரத்திலும் நெய் ஊற்றிய பொரி போல ருசி, சுவை, சுத்தம் அனைத்தும் கலந்தது. ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு ஜாதி சமைப்பும், ஒவ்வொரு சுவை அனுபவமும் – இந்த உணவுகள் தான் இந்தியாவின் உண்மையான அடையாளங்கள்