இறால் பலருக்கும் பிடித்த அசைவ உணவு. இதன் சுவையே நாம் எவ்வாறு சமைக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இறாலுக்கு சுவை கொடுப்பதே தக்காளியும், வெங்காயமும்தான். இறால் பிரியாணியில் இருந்து தொக்கு என்று வகை வகையாக சமைக்கலாம்.
இறால் கறி, இறால் தொக்கு என சப்பாத்தி, இட்லி, தோசை, சாப்பாடு என்று அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு அசைவ உணவு. இறாலை ஒவ்வொருவரும் அவர்களது பிராந்தியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சுவைகளுடன் சமைப்பது உண்டு. தேங்காய் துருவல், தேங்காய் பால், புளி, சிவப்பு மிளகாய், கசகசா சேர்ப்பதும் உண்டு.
செய்முறை:
முதலில் எண்ணெய் சூடு செய்து வெங்காயத்தை நிறம் மாறும்வரை வதக்கவும், இத்துடன் பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து வாசம் வரும் வரை வதக்க வேண்டும். இத்துடன், நறுக்கிய ஒரு தக்காளி, உப்பு, மஞ்சள் சேர்க்கவும். இவை அனைத்தும் நன்றாக கலந்து ஒன்றாக வரும் வரை வதக்கவும்.
அடடா... ருசியோ ருசி... இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க மட்டன் கறி!!
பின்னர் இத்துடன் கரம் மசாலா, கொத்துமல்லி பவுடர், மிளகாய் தூள் (காரத்திற்கு ஏற்ப), துருவிய தேங்காய் சேர்க்கவும். (இங்கு தேங்காய் வேண்டும் என்றால் சேர்க்கவும். காரமாக வேண்டுமானால் தேங்காய் தவிர்ப்பது நல்லது. இறாலும் சிறிது இனிப்பு கலந்த சுவையில் இருப்பதால், தேங்காய் சேர்ப்பது சிலருக்கு பிடிக்காது). நன்றாக ஐந்து நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். தனியாக ஆறவிடவும். பின்னர் இந்தக் கலவையை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
Chicken Recipe: ருசியான காரசாரமான ஆந்திரா சிக்கன் ஃபிரை செய்வது எப்படி?
அடுத்தது, அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, சீரகம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர், கறிவேப்பிலை சேர்க்கவும். இதில் அரைத்து வைத்து இருக்கும் கலவையை சேர்க்கவும். வதங்கிய பின்னர் சுத்தம் செய்து வைத்து இருக்கும் இறாலை சேர்க்கவும். மிருதுவாக வெந்தவுடன் ஸ்டவ் ஆப் செய்யவும். அதிகமாக வேக வைத்தால் இறால் கடினமாக இருக்கும். கொத்தமல்லி தூவி ருசிக்கலாம்.
பின் குறிப்பு: தீயை சிறிதாக வைத்து சமைத்தால் காரம், உப்பு இறாலில் நன்றாக இறங்கும்.