நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்.. டெங்குவின் ஆபத்தை தடுக்கலாம்..

By Ramya s  |  First Published Oct 5, 2023, 3:46 PM IST

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


இந்தியாவின் பல மாநிலங்களிலும்தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, நாம் நமது ஆரோக்கியத்தை நன்கு கவனிக்க வேண்டியது அவசியமாகிறது., கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது, கொசு உற்பத்தியைத் தவிர்ப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்.

உடலின் உள்ளே உள்ள வைரஸுக்கு எதிராக வலுவான போராட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Videos

undefined

டெங்குவை தடுக்க உதவும் 5 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் மூலம் வைரஸுக்கு எதிராக போராட உதவுகிறது. வைட்டமின் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி போன்ற பழங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

தயிர்: தயிரா என்று நினைக்காதீர்கள்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது தயிர். இது தவிர, இது நல்ல தூக்கத்தைப் பெறவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

மஞ்சள்: மஞ்சளில் அனைத்து மருத்துவ குணங்களும் உள்ளன. இது இந்திய சமையலறைகளில் காணப்படும் பொதுவான பொருட்களில் ஒன்றாகும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் தவிர, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

பூண்டு:

மஞ்சளைப் போலவே, பூண்டும் இந்திய வீடுகளில் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். பூண்டு இல்லாமல் எந்த ஒரு சமையலும் முழுமையடையாது என்றே சொல்ல வேண்டும். சுவை மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது. பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இஞ்சி: இந்திய சமையலில் தவிர்க்க முடியாத பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தொண்டைப் புண், வீக்கம், குமட்டல் மற்றும் டெங்கு காய்ச்சலின் பிற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக உள்ளது.

click me!