
கம்பு ஏராளமான சத்துக்கள் நிறைந்த தானியமாகும். இதில் எண்ணற்ற மினரல்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தரும். குறிப்பாக, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க கம்பு பெரிதும் உதவும். எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய கம்பில் சுவையான பணியாரம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள் :
கம்பு - 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கேரட், பீன்ஸ் - சின்னதாக நறுக்கியது
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
கம்பு பணியாரம் செய்ய முதலில், கம்பு, உளுந்து, வெந்தயம் இவை மூன்றையும் தண்ணீரில் நன்கு கழுவி சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் பணியார சட்டியை வைத்து அதை சூடாக்கவும். பிறகு அதில் லேசாக எண்ணெய் தடவி பணியாரமாவை அதில் ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் ருசியான மற்றும் ஆரோக்கியமான கம்பு பணியாரம் ரெடி!! சுட சுட இந்த பணியாரத்தை உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
கம்பு ஆரோக்கிய நன்மைகள் :