Muttai Biryani Recipe : இந்த பதிவில் ருசியான முட்டை பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பிரபலமான உணவாகும். அசைவை பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் முதல் உணவு இதுதான். பிரியாணியில் பல வகைகள் உள்ளன. அவை சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீஃப் பிரியாணி, மீன் பிரியாணி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பிரியாணி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அந்தவகையில், இப்போது இந்த பதிவில் ருசியான முட்டை பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் டேஸ்டான எக் பிரைடு ரைஸ்.. ஒருமுறை செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க!
முட்டை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை - 4 (வேக வைத்தது)
பாஸ்மதி அரிசி - 2 கப் (ஊற வைக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா -
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
அண்ணாச்சி பூ - 1
கல்பாசி - சிறிதளவு
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தயிர் - 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: வீடு மணக்க, கை மணக்க செட்டிநாடு முட்டை குழம்பு; செஞ்சு அசத்துங்க!!
செய்முறை:
முட்டை பிரியாணி செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.பிறகு அதில் அவிழ்த்து வைத்த முட்டையை இரண்டு பக்கமும் கீறி அதில் போட்டு நன்கு வதக்கி பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதனை அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். நீங்கள் விரும்பினால் இதனுடன் தயிரும் சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு அரிசி வேக வைக்க தேவையான அளவு தண்ணீரை இதில் ஊற்றி ஒரு முறை கிளறிவிடுங்கள். பிறகு அதில் அரிசியை சேர்த்து கிளறிவிடுங்கள். இப்போது, ஏற்கனவே தயாரித்து வைத்த முட்டை மசாலா மற்றும் புதினா இலையை சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பிறகு சில நிமிடங்கள் கழித்து, குக்கர் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் டேஸ்டான முட்டை பிரியாணி ரெடி. இதனுடன் நீங்கள் வெங்காய ரைத்தா சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D