10 நிமிடத்தில் சுவையான தேங்காய் சாதம்.. இப்படி செஞ்சி அசத்துங்க..!

By Kalai Selvi  |  First Published Jul 13, 2024, 2:51 PM IST

Coconut Rice Recipe : இந்த கட்டுரையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் புளிசாதம், லெமன் சாதம் என்று செய்து கொடுப்பதற்கு பதிலாக, வித்தியாசமான சுவையில் வெரட்டி ரைஸ் ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால், ஒரு முறை தேங்காய் ரைஸ் செய்து கொடுங்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகள் இந்த தேங்காய் சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும், இந்த ரெசிபி செய்வது ரொம்பவே ஈசி. முக்கியமாக இந்த ரெசிபியை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் லன்ச்பாக்ஸிற்கு கூட அடைத்துக் கொடுக்கலாம். அவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
துருவி தேங்காய் - 1 கப்
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
முந்திரி - சிறிளவு
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
வடித்து சாதம் - 2 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

Latest Videos

undefined

செய்முறை:
தேங்காய் சாதம் செய்ய முதலில், வடித்த சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும் பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து, பின் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் பச்சை மிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அதன் பிறகு அதில் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை கிளறி விடுங்கள். கடைசியாக எடுத்து வைத்த சாதத்தையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவ்வளவுதான் டேஸ்டான தேங்காய் சாதம் ரெடி. இந்த தேங்காய் சாதத்திற்கு நீங்கள் உருளைக்கிழங்கு ரோஸ்ட் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

click me!