கமகமன்னு.. டேஸ்ட்டான.. பன்னீர் புலாவ்.. ரெசிபி இதோ!

Published : Jul 13, 2024, 01:47 PM ISTUpdated : Jul 13, 2024, 02:00 PM IST
கமகமன்னு.. டேஸ்ட்டான.. பன்னீர் புலாவ்.. ரெசிபி இதோ!

சுருக்கம்

Paneer Pulao Recipe : இந்த கட்டுரையில் பன்னீர் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்..

தினமும் உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியாக சாப்பாடு சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் வித்தியாசமான சுவையில் ஏதாவது  வெரைட்டி ரைஸ் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.

உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? பன்னீர் கொண்டு வித்தியாசமான ரெசிபி சாப்பிட விரும்பினால், பன்னீர் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த ரெசிபி இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பன்னீர் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்..

இதையும் படிங்க:  பன்னீரில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்.. ரெசிபி இதோ!

பன்னீர் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
பன்னீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக வெட்டியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1 சின்ன துண்டு
ஏலக்காய் - 4 
கிராம்பு - 4 
பிரியாணி இலை - 1
கேரட் - 1/2 கப்
பட்டாணி - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்

இதையும் படிங்க:  இரவு சப்பாத்திக்கு ஒன் டைம் கடாய் பன்னீர் கிரேவி செய்து சாப்பிடுங்க.. அடிக்கடி செய்வீங்க!!

செய்முறை:

  • முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பன்னீர் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது புதினா இலை, கொத்தமல்லி இலை, தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இதனை அடுத்து ஒரு குக்கர் அடுப்பில் வைத்து  எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இதில் பட்டாணியையும் கேரட்டையும் சேர்த்து ஒருமுறை வதக்கவும். 
  • இப்போது இதனுடன் அரைத்து வைத்த புதினா கொத்தமல்லி விழுதை சேர்க்கவும் அதை ஒரு நிமிடம் வதக்கவும். பின் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது பன்னீரை இதில் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரிசியையும் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீரையும் இதில் சேர்த்து உப்பு இருக்கிறதா என்று பார்க்கவும். 
  • இப்போது குக்கரை மூடி 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும். விசிலில் தம் போனவுடன் குக்கர் மூடி திறந்து மெதுவாக ஒரு முறை கிளறவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பன்னீர் புலாவ் தயார். இந்த பன்னீர் புலாவுடன் ரைத்தா வைத்து சாப்பிடுங்கள் சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்
Dark Chocolate: சொன்னா நம்பமாட்டீங்க.! டார்க் சாக்லேட் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?