வாருங்கள்:!ருசியான கதம்ப சாதம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக கோவில்களில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல் என்று பல விதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாம் கோவில்களில் தரப்படும் பிரசாத வகைகளில் ஒன்றான கதம்ப சாதத்தை காண உள்ளோம்.
பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்யப்படுகின்ற இந்த கதம்ப சாதம் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் டீ=இதெற்கென எந் ஒரு சைடுடிஷ்ம் இல்லாமல் அப்படியே சுட சுட சாப்பிடலாம்.வாருங்கள்:!ருசியான கதம்ப சாதம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கெட்டி புளிக்கரைசல் - 1/2 கப்
பூசணிக்காய் - 1/4 கப்
மஞ்சள் பூசணி - 1/4 கப்
கத்தரிக்காய் - 1/4 கப்
முருங்கைக்காய்-1/4
உருளைக்கிழங்கு - 1/4 கப்
வேர்க்கடலை-- 1/4 கப்
வெல்லம் துருவியது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க:
தேங்காய்த்துருவல் - 8 ஸ்பூன்
மல்லி விதைகள் - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
எண்ணெய் - 1 ஸ்பூன்
மீந்த சாதத்தில் மொறுமொறு "பக்கோடா" செய்து கொடுங்க! ஒரு நிமிடத்தில் அனைத்தும் காலி!
தாளிப்பதற்கு :
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
முதலில் பச்சரிசி மற்றும் துவரம்பருப்பை அலசி பின் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 5 விசில் வைத்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு, பூசணிக்காய், முருங்கைக்காய் போன்றவற்றை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வெல்லம் மற்றும் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
வேர்க்கடலையை ஊற வைத்து அதனை வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் புளி போட்டு தண்ணீர் ஊற்றி, பின் புளிக்கரைசல் துடுத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் , தேங்காய் துருவல்,மல்லி விதைகள் ஆகியவற்றை வறுத்துக் கொண்டு பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு விலாசமான பாத்திரம் வைத்து கெட்டியான புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு அதில் 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொண்டு அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் 3/4 பதம் வெந்த பிறகு அதில் வேக வைத்த வேர்கடலைகளைச் சேர்க்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியினையும் சேர்க்க வேண்டும். அனைத்தும் கொதித்து ஒன்று சேர்ந்து நன்றாக வாசனை வரும் நேரத்தில் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது அதில் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் சாதம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின்,கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு பின் அதனை சாதம் உள்ள கலவையில் சேர்த்து கிளறி விட்டால் ருசியான கோவிலில் பிரசாதமாக வழங்கும் கதம்ப சாதம் ரெடி!!!