வாருங்கள்! ஈஸியான பட்டர் குல்ச்சாவை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம்மில் அதிகமானோர் நாண்,,பரோட்டா புல்கா போன்ற ரொட்டி வகைகளை ரெஸ்டாரண்டில் தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். இனி ரெஸ்டாரண்டிற்கு செல்லாமல் நாமே நமது வீட்டில் அதே சுவையில் குறைவான நேரத்தில் செய்தால் அதிகமாக செய்யலாம், மேலும் இதனை செய்ய செலவும் குறைவாகும்.
அந்த வகையில் ரொட்டி வகைகளில் ஒன்றான பட்டர் குல்ச்சாவை தான் இன்று நாம் காண உள்ளோம். இதற்கு பன்னீர் கிரேவியோ அல்லது சிக்கன் கிரேவியோ வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வாருங்கள்! ஈஸியான பட்டர் குல்ச்சாவை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பட்டர் குல்ச்சா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
பால் - 1/2 கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
சர்க்கரை-1 /2 ஸ்பூன்
பட்டர் – தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வீட்டில்லேயே செய்து கொண்டாடலாம் வாங்க!
செய்முறை:
முதலில் ஒரு விசாலமான பாத்திரத்தில் அல்லது தட்டில் பால், ஊற்றிக் கொண்டு பின் அதில் உப்பு, பேக்கிங் சோடா ,சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் கொள்ள வேண்டும். பின் அந்த பாத்திரத்தில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணி வைத்து மூடி சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
1/2 மணி நேரத்திற்கு பிறகு மாவினை கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். அனைத்து மாவினையும் இதே போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.பின் உருண்டயை சப்பாத்திக்கல்லில் வைத்து தேய்த்துக் கொண்டு அதன் மேல் சிறிது நீரை தடவி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் தவா வைத்து சூடான பிறகு, தேய்த்து வைத்துள்ள குல்ச்சா ஒன்றை போட வேண்டும். (நீர் தடவிய பக்கம் தவாவின் அடிப்பக்கம் இருக்குமாறு போட்டுக் கொள்ள வேண்டும்.
இப்போது குல்ச்சா சற்று உப்பி வரும் நேரத்தில், தவாவை எடுத்து, கவிழ்த்து தீயில் சில நொடிகள் காட்டி, குல்ச்சாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக குல்ச்சா மீது சிறிது பட்டர் விட்டு ஸ்ப்ரெட் செய்து விட்டால் ருசியான பட்டர் குல்ச்சா ரெடி!
இதே போன்று அனைத்து உருண்டைகளையும் பட்டர் குல்ச்சாவாக செய்து கொள்ள வேண்டும்.