வாருங்கள்! சுவையும்,ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் அவல் வெஜ் ஊத்தப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நம் அன்றாட காலை உணவில் முதலிடம் பிடிப்பது இட்லி,தோசை தான். காலையில் விரைவாக அதே நேரத்தில் விரைவில் செரிமானம் ஆக கூடிய உணவுகள் தான் இந்த இட்லி மற்றும் தோசை.
இந்த இட்லி, தோசை சுடுவதற்கு மாவு இல்லையாயென்றால் அதற்கடுத்த படியாக பலரும் உப்மாவுக்கு தான் செல்வார்கள். ஆனால் உப்மா என்றால் பலரும் தலை தெறிக்க ஓடி விடுவார்கள் .
ஆக இந்த உப்மாவை செய்வதற்கு பதிலாக வேற 1 ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். என்ன ரெசிபியாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? அவல் வைத்து அட்டகாசமான,ஆரோக்கியமான ஒரு காலை உணவான அவல் ஊத்தப்பம் தான் பார்க்க உள்ளோம். அவலில் சிவப்பு அவல் ,வீலை அவல் என்று 2 வகை உண்டு. எந்த வகையாக இருந்தாலும் ருசி நன்றாக தான் இருக்கும்.
வாருங்கள்! சுவையும்,ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் அவல் வெஜ் ஊத்தப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு / வெள்ளை அவல் -1 கப்
ரவை-1 1/4 கப்
தயிர்-1 கப்
வெங்காயம்-1
தக்காளி-1
கேரட்-1
கறிவேப்பிலை- 1 கொத்து
மல்லித்தழை-கையளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
undefined
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் அவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் கணீர் இல்லாமல் பிழிந்து விட்டு அவலை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பேஸ்ட்டில் ரவை, தயிர்,உப்பு ஆகியவை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கரைத்த கலவையை 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை,மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்துக் கொண்டு அனைத்தையும் ஒரு பௌலில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதில் கேரட்டை துருவி மீண்டும் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து ,கல் சூடான பின் அதில் மாவினை ஊத்தப்பம் போன்று ஊற்றி அரிந்து வைத்துள்ள வெங்காய கலவையை 1 கையளவு எடுத்து ஊத்தப்பம் மேல் தூவி சிறிது எண்ணெய் சுற்றி விட்டு 1 பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வெந்த பின் எடுத்தால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த அவல் ஊத்தப்பம் ரெடி! இதற்கு கார சட்னி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இனி மாவு இல்லையேன்னு டென்ஷன் ஆகாமா அவல் வைத்து டக்குனு இப்படி ரெசிபியை செய்து கொடுத்து அசத்துங்க!