Sukku Malli Coffee : நறுமணம் கமழும் "சுக்கு மல்லி காபி" குடித்து ஜலதோஷத்தில் இருந்து விடுபடுங்கள் !!!

By Dinesh TGFirst Published Nov 15, 2022, 12:06 PM IST
Highlights

வீட்டிலிலேயே பாரம்பரிய முறையில் சுக்கு மல்லி காபியை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மழைக்காலம் எட்டி பார்த்து மழையும் ஆங்காங்கே பெய்து கொண்டுள்ளது. இந்த காலத்தில் நம்மில் அதிகமானோர் ஜலதோஷம், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோம்.இந்த ஜலதோஷம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு எளிதில் கிடைக்க வேண்டுமென்றால் , நாம் வீட்டிலேயே ஒரு பானம் செய்து குடித்தால் போதும் உடனடியாக அதற்கு தீர்வு கிடைத்து விடும்.என்ன பானம் என்று யோசிக்கிறீர்களா? 

ஜலதோஷத்தை டக்கென்று ஓட வைக்க சுக்கு மல்லி காபியை செய்து சாப்பிடுங்க. காபியில் பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி, டிகிரி காபி என்று பல வகை இருக்கின்றன.பல விதமான காபி வகைகள் இருந்தாலும், பாரம்பரியமான மற்றும் மருத்துவ குணம் நிறைந்த சுக்கு மல்லி காபியை அருந்தி பாருங்கள்.அதன் சுவையும் மணமும் வார்த்தைகளால் அளவிட முடியாது . 

வீட்டிலிலேயே பாரம்பரிய முறையில் சுக்கு மல்லி காபியை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சுக்கு மல்லி காபி செய்ய தேவையான பொருட்கள்:

சுக்கு – 1/4 கப் 
மிளகு – 1/8 கப் 
தனியா விதை – 1/2 கப்
ஏலக்காய் – 10 
பனை வெல்லம் – தேவையான அளவு 

சுவையான “ஆல்மண்ட் பெப்பர் கிரேவி சிக்கன் " செய்யலாம் வாங்க

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் சேர்க்காமல், கடாய் சூடான பின்,மிளகு, தனியா விதை, ஏலக்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து (தனித்தனியாக போட வேண்டும்) நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொண்டு, பின் அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, ஆற வைக்க வேண்டும்.பின் சுக்கின் தோலினை நீக்கிவிட்டு,ஒரு கல்லை வைத்து லேசாக தட்டி நசுக்கி கொண்டு, போட்டு சுக்கினை கொஞ்சம் கொரகொரவென பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு மிக்சி ஜாரில் மிளகு, தனியா,ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.இதுவே சுக்கு மல்லி காபி பவுடர் ஆகும். இதனை காற்று புகாத டப்பாவில் மாற்றி கொண்டால், தேவைப்படும் போது உபயோகிக்கலாம். இப்போது ஒரு சின்ன பாத்திரத்தில் ,பனை வெல்லத்தை துருவி கொண்டு தண்ணீர் ஊற்றி ,கொதிக்க வைத்து பின் அதனை வடிகட்டி கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 கப் தண்ணீர் சேர்த்து , 2 ஸ்பூன் சுக்கு மல்லி காபி பவுடர் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பிறகு, அதனை தண்ணீரை வடிகட்டி கொண்டு, வடித்து வைத்துள்ள பனை வெல்ல நீர் சேர்த்து குடித்தால், கமகமவென நறுமணம் கமழும் சுக்கு மல்லி காபி ரெடி!

click me!