Crab Masala : சுவையான நண்டு மசாலா செய்யலாமா!

By Dinesh TG  |  First Published Nov 14, 2022, 12:48 PM IST

சுவையான நண்டு மசாலாவை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின்  மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அசைவ உணவுகளில் மட்டன்,சிக்கன்,இறால்,மீன் என்று பல வகை இருந்தாலும், நண்டின் சுவையோ அலாதியாக, அருமையாக இருக்கும்.கடல் உணவான நண்டிற்கு பெரும்பாலானோர் அடிமை என்று கூறும் அளவிற்கு, நண்டினை அதிகமானோர் மிகவும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். 

நண்டு உடலில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி, முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கும். நண்டினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி தொல்லைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.மேலும் நாட்பட்ட இருதய நோய் பாதிப்பு கொண்டவர்கள், நண்டினை உணவில் எடுத்துக் கொண்டால்,இருதய பாதிப்பு குறைவதோடு, உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

Latest Videos

undefined

சுவையான நண்டு மசாலாவை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின்  மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

நண்டு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் - 1/4 முடி 
பெருஞ்சீரகம் – ¼ ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலாத் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய்த் தூள் - 3/4 ஸ்பூன் 
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் 
மல்லித்தழை - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் நண்டை சுத்தம் செய்து விட்டு,அலசி தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொண்டு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பிரட்டி கொண்டு, சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகினை ஒன்றிரண்டாக பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் சேர்க்காமல், பொடித்த மிளகு மற்றும் துருவிய தேங்காய் இரண்டினையும் ஒவ்வொன்றாக போட்டு, லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்துள்ள நண்டில் வறுத்த தேங்காய் துருவல், வறுத்த மிளகு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். 

அடுப்பில் கடாய் வைத்து,சிறிது எண்ணெய் சேர்த்து, பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொண்டு,பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்,தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி கொண்டு, பின் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

இப்போது கரம் மசாலாத் தூள் மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொண்டு,பின் அதில் ஊற வைத்துள்ள நண்டினை சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும். இப்போது கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, தட்டு போட்டு மூடி வைத்து நண்டினை வேக வைக்க வேண்டும். வெந்தபிறகு கொஞ்சம் கிளறி விட்டு, மல்லித்தழை தூவினால் டேஸ்ட்டான நண்டு மசாலா ரெடி!

click me!