இன்று நாம் சிக்கன் வைத்து ஆல்மண்ட் பெப்பர் சிக்கன் கிரேவியை சுவையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளாலாம்.
அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் சிக்கன் ரெசிபிஸ் முதலிடத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. வழக்கமாக சிக்கன் வைத்து சிக்கன் லாலி பாப், சிக்கன் 65, சிக்கன் கிரேவி செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று கொஞ்சம் டிப்ரெண்டாக ஆல்மண்ட் மற்றும் பெப்பர் சேர்த்து கார சாரமான ஒரு கிரேவியை பார்க்கலாம் வாங்க.
இந்த கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி, நாண் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடம் விதத்தில் இதன் சுவை அலாதியாக இருக்கும்.
இன்று நாம் சிக்கன் வைத்து ஆல்மண்ட் பெப்பர் சிக்கன் கிரேவியை சுவையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளாலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம்-100 கிராம்
தக்காளி - 2
எலுமிச்சை - 1/2 பழம்
இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
மிளகாய்த் தூள் -2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 3 ஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
சிக்கன் மசாலா -1 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் -1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவ
அரைப்பதற்கு :
ஆல்மண்ட் (பாதாம் பருப்பு) - 10
தேங்காய்- 1/2 கப்
பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
"ஆனியன் சூப்" சாப்பிட்டு நோய்களை விரட்டி அடியுங்கள்
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் சையது விட்டு, தண்ணீரில் நன்கு அலசி, பின் அதனை தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொண்டு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். .
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், பட்டை ,கிராம்பு, பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்து விட்டு, பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட வேண்டும்.
இஞ்சி, பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து , அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு, பின் தக்காளி சேர்த்து, வதக்கி விட வேண்டும். தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அலசி வைத்துள்ள சிக்கன் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் குக்கரில் மிளகாய்த் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, கரம் மசாலாத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி விட்டு, 3 விசில் வைத்து சிக்கனை வேக வைத்துக் கொண்டு, அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.
விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து அதில் உள்ள சிக்கன் கலவையை ஒரு கடாயில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு மிக்சி ஜாரில், தேங்காய், ஆல்மண்ட், பெருஞ்சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைப்போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அரைத்த விழுதை கடாயில் சேர்த்து கறிவேப்பிலையும் தூவி விட்டு, சுமார் 10 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து இறக்கினால் ரிச்சான டேஸ்ட்டான ஆல்மண்ட் பெப்பர் சிக்கன் கிரேவி ரெடி!