ருசியான மிளகு பூண்டு சாம்பார் !இப்படி செய்து பாருங்க-அருமையாக இருக்கும்

By Dinesh TG  |  First Published Nov 25, 2022, 1:35 PM IST

பொதுவாக மிளகு-பூண்டு சேர்த்து ரசம், குழம்பு போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சற்று மாற்றாக மிளகு-பூண்டு சேர்த்து சுவையான சாம்பார் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இந்த மழை காலத்திற்கு சுட சுட சாதமும் சுவையான ஒரு சாம்பாரும், தொட்டு கொள்ள ஊறுகாய் அல்லது அப்பளம் மட்டும் போதும், வேறு எதுவும் தேவையில்லை. ஒரு சிலருக்கு தொட்டு கொள்ள கூட எதுவும் தேட மாட்டார்கள். சாம்பார் மட்டும் ஊற்றி சட்டென்று சாப்பிட்டு முடிப்பார்கள்.
அந்த அளவிற்கு இதன் சுவை அசத்தலாக இருக்கும். 

பொதுவாக மிளகு-பூண்டு சேர்த்து ரசம், குழம்பு போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சற்று மாற்றாக மிளகு-பூண்டு சேர்த்து சுவையான சாம்பார் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

undefined

மிளகு பூண்டு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு-1 கப் 
பூண்டு - 15 
மிளகுத் தூள் - 1 ஸ்பூன் 
புளிக் கரைசல் - 1 கப்
வெந்தயம் - 1/2ஸ்பூன் 
தனியா - 2ஸ்பூன் 
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன் 
கடலை பருப்பு - 2 ஸ்பூன் 
சீரகம் - 2 ஸ்பூன் 
நெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 
மல்லித்தழை-கையளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு- தேவையான அளவு 

ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு சுவையான சுண்டல் சாட் செய்யலாம் வாங்க!

செய்முறை:

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் அலசிய துவரம் பருப்பை போட்டு 5 விசில் வரும் வரை வேக வைத்துக் கொண்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி,தீயினை சிம்மில் வைத்து எண்ணெய்யை சூடாக்க வேண்டும்.எண்ணெய் சூடான பின்,வெந்தயம்,சீரகம்,தனியா விதைகள், கடலைப் பருப்பு,உளுந்தம் பருப்பு, மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுத்துக் கொண்டு,ஒரு தட்டில் எடுத்து எடுத்து விட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.கலவை ஆறிய பின்பு,ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் கடாய் வைத்து சிறிது நெய்யை சேர்த்து,மிதமான தீயில் உருக்க வைத்து பின் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விட வேண்டும். பின் அதில் புளிக்கரைசல் மற்றும் அரைத்த மசாலா பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். 

இப்போது வேகவைத்த பருப்பை கடாயில் சேர்த்து கொஞ்சம் கடைந்து விட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பின் கொதித்து கொஞ்சம் கெட்டியாக மாறி வாசனை வரும் போது அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, மல்லித்தழையை தூவி இறக்கினால் அசத்தலான சுவையில் மிளகு பூண்டு சாம்பார் ரெடி!

click me!