மூட்டு வலி & கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்கும் ''சாமை- பூசணிக்காய் தோசை''!

By Dinesh TG  |  First Published Nov 4, 2022, 2:00 PM IST

மூட்டு வலி மற்றும் கருப்பை கோளாறுகள் போன்றவற்றை விரட்டி அடிக்க சாமையுடன் பூசணிக்காய் சேர்த்து தோசையை எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.
 


இன்றைய நவீன உலகத்தில் நாம் அனைவரும் இயந்திரங்கள் போல் அயராது உழைப்பதால் ,நம்மில் பலருக்கும் மூட்டு வலி மற்றும் உடல் வலி போன்ற பல உடல் பிரச்சனைகளை சந்திக்கின்றோம். மேலும் நேரமின்மையால் பல வகையான பாஸ்ட் புட் போன்ற உணவகளை சாப்பிட்டு இலவசமாக உடல் உபாதைகளை பெறுகிறோம். 

இதற்கெல்லாம் சரியான தீர்வு என்றால் நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய உணவுகளை சமைத்து சாப்பிட்டாலே நாம் இது போன்ற பிரச்சனைகளை தவிர்த்திட முடியும் .

Latest Videos

undefined

மேலும் இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் , வீட்டிலேயே ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவுகள் செய்து சாப்பிடுவதன் மூலம் எளிதில் நிவாரணம் பெற முடியும். 

அந்த வகையில் மூட்டு வலி மற்றும் கருப்பை கோளாறுகள் போன்றவற்றை விரட்டி அடிக்க சாமையுடன் பூசணிக்காய் சேர்த்து தோசையை எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

டீ டைம் ஸ்னாக்ஸ் உடன் ''அடை மாவு பக்கோடா'' செய்யலாமா ?

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி – 1 கிளாஸ் 
இட்லி அரிசி – 1 கிளாஸ் 
உளுத்தம் பருப்பு – 1/4 கிளாஸ்
வர மிளகாய் – 7 
சின்ன வெங்காயம் – 10
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் -- தேவையான அளவு 

செய்முறை:

முதலில் இட்லி அரிசியை நன்கு அலசி, ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் உளுந்தினை அலசி அதனையும் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து சாமை அரிசியை சுத்தம் செய்து அதனையும் அலசி விட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணி நேரங்கள் வரை ஊற வைக்க வேண்டும். 

பூசணிக்காயின் தோல் சீவி விட்டு பின்,கழுவி கொண்டு, துருவி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை பொடியாக அரிந்துக் கொண்டு அதனையும் தனியாக வைத்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து,சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு,வர மிளகாய், துருவிய பூசணிக்காய், பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

அவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் ஊற வைத்துள்ள அரிசி,உளுந்து ஆகியவற்றை தண்ணீர் வடித்துக் கொண்டு, ஒரு மிக்சி ஜாரில் அல்லது கிரைண்டரில் மை போன்று அரைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரங்கள் வரை புளிக்க வைத்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு தோசைகல் வைத்து, சிறிது எண்ணெய் தடவி , தோசைக்கல் காய்ந்த பின் புளித்த மாவினை எடுத்து தோசையாக ஊற்றி, ஒரு பக்கம் வெந்த பின் மரு பக்கம் திருப்பி போட்டு வார்த்து எடுத்தால் சத்தான சாமை பூசணிக்காய் தோசை ரெடி

click me!