Soya Beans Dosa : மாவு அரைத்து கஷ்டப்படாமல், சட்டென்று எளிமையாக ஆரோக்கியமான தோசை செய்யலாமா?

By Dinesh TG  |  First Published Nov 2, 2022, 8:01 PM IST

மாவு அரைத்து கஷடப்படாமல் , சட்டென்று எளிமையாக ஆரோக்கியத்தை பரிசாக அளிக்கின்ற சோயா பீன்ஸ் தோசை . இதனை எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா? 
 


நாம் அன்றாட வாழ்வில் தினமும் காலை உணவாக தோசை சாப்பிட்டு இருப்போம்.தோசையில் ஆனியன் தோசை, பொடி தோசை, முட்டை தோசை என்று இன்னும் பல விதமான தோசை வகைகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் சத்தான, ஆரோக்கியமான தோசை ஒன்று காண உள்ளோம். என்ன தோசையாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?

மாவு அரைத்து கஷடப்படாமல் , சட்டென்று எளிமையாக ஆரோக்கியத்தை பரிசாக அளிக்கின்ற சோயா பீன்ஸ் தோசை . இதனை எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா? 

Tap to resize

Latest Videos

சோயா பீன்ஸில் அதிக அளவில் புரதங்கள், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் நமது ஆரோக்கியதிற்கு மிக சிறந்த ஒரு உணவாகும்.  (முளைக்கட்டிய சோயா பீன்ஸை அரைத்து இந்த தோசையை செய்தால் மேலும் அதிக அளவிலான விட்டமின் E நமக்கு கிடைக்கும்.)

இந்த சோயா பீன்ஸ் தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 2 கப்
கேரட் - 2 ஸ்பூன் (துருவியது)
முள்ளங்கி - 2 ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி மாவு - 4 ஸ்பூன் 
இஞ்சி - 1 இன்ச் 
பச்சை மிளகாய் - 4
சீரகம் - ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு 

செய்முறை:

முதலில் சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
பின் கேரட், முள்ளங்கியை துருவி தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். 

ஊறிய சோயா பீன்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையில் அரிசி மாவு, துருவிய கேரட், துருவிய முள்ளங்கி, சீரகம் ,வெங்காயம் , தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 

அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து , தோசைக் கல் சூடான பின் , சிறிது எண்ணெய் தடவி , சோயா பீன்ஸ் மாவினை எடுத்து தோசை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வார்த்தெடுத்தால் சுவையான , ஆரோக்கியமான தோசை ரெடி!

click me!