வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ இதனை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!!

By Dinesh TGFirst Published Nov 2, 2022, 5:42 PM IST
Highlights

வழக்கமாக செய்கின்ற வெரைட்டி ரைஸ்களான வெஜ் ரைஸ், லெமன் ரைஸ், பிரைட் ரைஸ் என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ இதனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. 
 

பொதுவாக நாம் மெக்ஸிகன் ரைஸை ரெஸ்டாரண்டில் தான் சுவைத்து இருப்போம். அதன் சுவை அதிகமாக இருந்தாலும் , விலையும் சற்றுஅதிகமாக தான் இருக்கும்.அதே உணவே நமது வீட்டில் அதே சுவையில் மிக சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மெக்ஸிகன் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

Latest Videos

ஜீரா ரைஸ்- 1 கப் (1/4 கிலோ)
வெங்காயம் - 2
கோஸ் - 50 கிராம்
தக்காளி - 1
கேப்ஸிகம் -1
பூண்டு - 5 பெரிய பற்கள் 
மிளகாய்த் தூள் -1 ஸ்பூன் 
நெய் - சிறிது 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு 

குழந்தைகளுகள் விரும்பி சாப்பிடும் சூப்பரான வெஜ் சூப்! இந்த மாதிரி செய்து குடுங்க!!

செய்முறை:

கோஸை மெல்லிய நீளவாக்கில் அரிந்து கொள்ள வேண்டும். பின் தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.வெங்காயத்தை நீளமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேப்ஸிகமை மெல்லிய நீட்ட வடிவாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து, காய்ந்த பின் , பூண்டு சேர்த்து வதக்கி விட்டு, பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பொன்னிறமாக மாறிய பின் அதனை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி , அதில் 5 நிமிடம் ஊறிய அரிசி மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் அதே பான் வைத்து சிறுது எண்ணெய் ஊற்றி, சூடான பின் கோஸை சேர்த்து வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் மேலும் சிறிது என்னை ஊற்றி, சூடான பின், தக்காளி மற்றும் கேப்ஸிகம் சேர்த்து வதக்கி விட்டு, பின் அதில் மிளகாய்த் தூள் போட்டு லைட்டாக தண்ணீர் தெளித்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். 

வதங்கிய பின், அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, வதங்கிய கோஸ் மற்றும் வேக வைத்து எடுத்துள்ள சாதம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி விட்டால் சுட சுட சுவையான மெக்ஸிகன் ரைஸ் ரெடி! இதனை டொமேட்டோ கெட்சப் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

click me!