குழந்தைகளுகள் விரும்பி சாப்பிடும் சூப்பரான வெஜ் சூப்! இந்த மாதிரி செய்து குடுங்க!!

By Dinesh TGFirst Published Nov 2, 2022, 3:24 PM IST
Highlights

இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு வெஜ் சூப் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.
 

இன்றைய குழந்தைகள் காய்கறிகளை கண்டாலே ஓடி ஒளிந்து விடுகிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு காய்கறிகள் மிக இன்றியமையாத ஊட்ட சத்தினை தருகிறது. காய்கறிகளை பொரித்தோ அல்லது அவித்தோ கொடுக்காமல் , இந்த மாதிரி சுவையான முறையில் சூப் செய்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் அதன் சுவை சூப்பராக இருக்கும். வாங்க . இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு வெஜ் சூப் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் ( பொடியாக நறுக்கியது) - 1 கப்
கேரட் -2 ஸ்பூன் 
பீன்ஸ் - 2 ஸ்பூன் 
பூண்டு - 1 ஸ்பூன்
கோஸ் - 2 ஸ்பூன் 
காலிபிளவர் (பொடியாக அரிந்தது ) - கையளவு 
பச்சைப் பட்டாணி - 1 கையளவு 
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
பட்டர் - 1 ஸ்பூன்

ஒயிட் சாஸ் செய்வதர்க்கு:

பால் - 1 கப்
கார்ன் பிளார் - 1 ஸ்பூன்
மைதா- 2 ஸ்பூன்
பட்டர் - 2 ஸ்பூன்.

சைனீஸ் முறையில் ஸ்பைசியான சூப்பரான நண்டு மசாலா!

செய்முறை:

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிது பட்டர் சேர்த்து , உருகிய பின் அதில் பொடியாக அரிந்த பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

அடுத்து பொடியாக அரிந்த கேரட், கோஸ் , காளி பிளவர் , பச்சைப் பட்டாணி சேர்த்து மீண்டும் வதக்கி விட்டு 4 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு, 3 நிமிடம் கொதிக்க விட்டு பின் குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். 

விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து, ஸ்டாக்கிணை காய்களுடன் ஒரு பௌலில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டியில் இருக்கும் காய்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதினை மீண்டும் வடி கட்டி எடுத்துக் கொண்டு அதனை அதே பௌலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பில் அதே குக்கரில் சிறிது பட்டர் மற்றும் மைதா சேர்த்து கொண்டு, அடுப்பின் தீயை மிதமான வைத்து வதக்கி விட வேண்டும். 

ஒரு சின்ன கிண்ணத்தில் கார்ன் பிளார் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து, அதனை குக்கரில் சிறுக சிறுக ஊற்றி, கட்டி இல்லாமல் நன்றாக மிக்ஸ் செய்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும். இதனுடன் வெஜ் ஸ்டாக்கினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சுட சுட குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெஜ் சூப் ரெடி!!!

click me!