இரும்பு சத்தும், நார் சத்தும் நிறைந்துள்ள தேங்காய் பால் ரசம் தெரியுமா?

By Dinesh TGFirst Published Nov 1, 2022, 3:16 PM IST
Highlights

இந்த பதிவில் தேங்காய் பால் ரசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. 
 

நாம் வழக்கமாக மதிய உணவுகளில், ரசம் ஊற்றி சாதம் சாப்பிட்டு இருப்போம். நாம் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கு ரசம் பெரிதும் துணை புரியும். பருப்பு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம் என்று ரசத்தில் பல வகைகல் உள்ளன. அந்த வகையில் இன்று , நாம் நமது ஆரோக்கியத்திற்கு ஏற்ற தேங்காய் பால் ரசம் பார்க்க உள்ளோம்.

தேங்காய் பால் சாதம் ,தேங்காய் பால் பிரியாணி , தேங்காய் பால் குருமா என்று தேங்காய் பால் வைத்து பல வகையான ரெசிபிஸ் செய்து சுவைத்து இருப்போம். மேலும் தேங்காய் பால் ஊற்றி இடியப்பம் , ஆப்பம் சாப்பிட்டு இருப்போம் . 

ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் ஆரோக்கியமான முறையில் தேங்காய் பால் வைத்து ரசம் செய்ய உள்ளோம்.தேங்காய் பால் ரசத்தில் இரும்பு சத்தும், நார் சத்தும் நிறைந்து உள்ளதால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த பதிவில் தேங்காய் பால் ரசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2 கப் 
புளி - எலுமிச்சை அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
சீரக தூள் - 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
கறி மசாலா தூள் - 1 ஸ்பூன் 
வடகம் - 1 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் "பன்னீர் பீஸ் மசாலா" - இப்படி செய்து பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது!

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை மெல்லிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த புளி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது புளித் தண்ணீரில் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய், தக்காளி ,வெங்காயம் நன்றாக பிசைந்து கொண்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் இந்த பாத்திரத்தை வைத்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.  அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின், அதில் வடகம் சேர்த்துக் கொண்டு, பின் அதில் சீரக தூள், மிளகாய் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். 

தாளித்ததை ரசத்தில் ஊற்றி நன்றக மிக்ஸ் செய்த பிறகு, அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.அவ்ளோதாங்க ஆரோக்கியம் நிறைத்த தேங்காய் பால் ரசம் ரெடி!!1 இந்த ரசம் வயிற்று புண் போன்ற பிரச்னையை விரைவில் குணமாக்கும். 

click me!