கத்திரிக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மிளகு கத்திரிக்காயை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் செய்கின்ற கத்திரிக்காய் வறுவல் , கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் ப்ரை என்று இல்லாமல், இப்படி செட்டிநாடு முறையில் காரசாரமான மிளகு கத்திரிக்காயை ஒரு முறை செய்து பாருங்க. இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் கத்திரிக்காய் முதன்மை இடத்தை பெற்றுள்ளது என்று கூறும் அளவிற்கு ,பல நன்மைகளை நமக்கு தருகிறது.
கத்திரிக்காயில் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் உள்ள காரணத்தினால் நினைவாற்றலை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கினை பெற்றுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்தம், சளி மற்றும் வாதநோய் போன்றவற்றை எளிதில் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
undefined
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதனால் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. இன்னும் பல வகையான நன்மைகளை தரும் கத்திரிக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மிளகு கத்திரிக்காயை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்- 200 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சூப்பரான சுவையில் "கொங்குநாடு சிக்கன் சிந்தாமணி" இப்படி செய்து பாருங்க!
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை அலசி விட்டு, நீட்ட நீட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டினையும் மிக பொடியாக அரிந்து எடுத்துக் கொண்டு அனைத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது என்னை ஊற்றி, எண்ணெய் சூடான பின், கடுகு, சீரகம் மற்றும் சோம்பு போட்டு தளித்துக் கொண்டு, பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு, பின் தக்காளி சேர்த்து , அது நன்றாக மசியும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் கத்தரிக்காயை சேர்த்து வதக்கி , சிறிது தண்ணீர் தெளித்து வேக விட வேண்டும்.
கத்திரிக்காய் வெந்த பிறகு சிறிது மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக 2 நிமிடங்கள் வரை கிளறி விட்டு பின் அடுப்பிலிருந்து இறக்கினால் காரசாரமான செட்டிநாடு மிளகு கத்திரிக்காய் ரெடி!