குட்டிஸ்கள் விரும்பும் "மஸ்ரூம் சீஸ் பாப்பர்ஸ்" -தட்டில் வைத்த அடுத்த நிமிடம் காலி ஆகி விடும்!

By Dinesh TG  |  First Published Nov 5, 2022, 5:02 PM IST

மஷ்ரூம் சீஸ் பாப்பர்ஸ்-ஐ எப்படி வீட்டில் எளிமையாகவுவும் சுவையாகவும் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 


பள்ளி முடித்து சோர்வாக வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில், வழக்கமாக செய்கின்ற ஸ்னாக்ஸாக இல்லாமல், கொஞ்சம் டிஃபரென்டான ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான். மஷ்ரூம் மற்றும் சீஸ் வைத்து அபாரமான சுவையில் , ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் செய்வோமா?

இது நன்கு சீஸியாகவும், ஜூஸியாகவும் இருப்பதால், மாலை நேரத்தில் பள்ளி முடித்து டயர்டாக வரும் குழந்தைகள் இதனை சாப்பிட்டு உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் மாறுவார்கள். சரிங்க இந்த மஷ்ரூம் சீஸ் பாப்பர்ஸ்-ஐ எப்படி வீட்டில் எளிமையாகவுவும் சுவையாகவும் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம் - 20 
மொசரெல்லா சீஸ் - 1/2 கப்
க்ரீம் சீஸ் - 1/4 கப்
பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவையான அளவு

கோட்டிங் செய்வதற்கு :

பிரட் க்ரம்ஸ் - 2 கப் 
மைதா - 1 கப் 
கார்ன் பிளார் - 1/4 கப் 
உப்பு - தேவையான அளவு 
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப 

Potato Cheese Omelette : ஆம்லெட் டை இப்படி செய்து கொடுங்க. எத்தனை சாப்பிட்டோம் என்றே தெரியாது!

செய்முறை: 

முதலில் மஷ்ரூமை அலசிவிட்டு, அதன் தண்டினை நீக்கி விட வேண்டும். அந்த தண்டினை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் மிளகுத் தூள், உப்பு, மிக பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு , மொசரெல்லா சீஸ், க்ரீம் சீஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள மஷ்ரூம் தண்டுகளை சேர்த்து, மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மஷ்ருமை ,சீஸ் கலவையினை வைத்து ,மஷ்ரும் வெளியில் தெரியாதவாறு சீஸ் வைத்து மூடி கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கார்ன் பிளார் ,மைதா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் மிக்ஸ் செய்து விட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைசல் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு சீஸ் வைத்து மூடிய மஷ்ரும் ஒன்றினை எடுத்து, அதனை மைதா மாவினால் பிரட்டிக் கொண்டு , பின் அதனை கார்ன் பிளார் கரைசலில் பிரட்டி விட்டு, இறுதியாக பின் பிரட் க்ரம்ஸில் பிரட்டி கொண்டு, தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த மாதிரி அனைத்து மஷ்ரும்களையும் செய்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தட்டினை ஃப்ரிட்ஜில் 5 நிமிடங்கள் வைத்து விட்டு, பின் வெளிய எடுத்துக் கொள்ள வேண்டும்

இறுதியாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு, மஷ்ரும் உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும், உருண்டைகள் பொன்னிறமாக மாறிய பின் , எடுத்து வடிக்கட்டி ஒரு தட்டில் வைத்தால் , சூப்பரான சுவையில் மஸ்ரூம் பாப்பர்ஸ் ரெடி!

click me!