வாருங்கள்! டேஸ்ட்டான வெஜ் மோமோஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முழுதும் பிரபலமான உணவு வகைகளில் நூடுல்ஸ், பீசாவிற்கு அடுத்த படியாக மோமோஸும் ஒன்றாகும். இதனை மாலை நேரத்தில் எடுத்துக் கொள்ள கூடிய சிற்றுண்டி வகையை சேர்ந்தது.
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருக்கிறது. மோமோஸில் பன்னீர் மோமோஸ், சிக்கன் மோமோஸ், சில்லி மோமோஸ்,தந்தூரி மோமோஸ் என்று பல விதமான மோமோஸ்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் சுவையான வெஜ் மோமோஸினை செய்வதை பார்க்க உள்ளோம்.
வாருங்கள்! டேஸ்ட்டான வெஜ் மோமோஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
நீரழிவு நோயினை கட்டுப்படுத்த சிவப்பரிசி பாயசம்!
undefined
செய்முறை:
முதலில் வெங்காயம், முட்டைகோஸ்,கேரட்,கேப்ஸிகம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதில் கோதுமை மாவும் தேவையான அளவு உப்பும் சேர்த்து சப்பாத்தி மாவிற்கு பிசைவது போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணியை கொண்டு மூடி விட்டு சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதி சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடான பிறகு, முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு, பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள கேரட், முட்டைக்கோஸ், கேப்ஸிகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி விட்டு பின் சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும்.
சுமார் 3 நிமிடங்கள் வரை கிளறி விட வேண்டும். இப்போது பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பூரி போன்று தேய்த்துக் கொண்டு நடுவில், வேக வைத்துள்ள மசாலாவை வைத்து எல்லா பக்கமும் மூடி விட வேண்டும்.
இதே மாதிரி அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும்.பின் மோமோஸ்களை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 15 நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! சூப்பரான சுவையில் வெஜ் மோமோஸ் ரெடி!