பாலிலுள்ள கலப்படத்தை இப்படியும் கண்டுப்பிடிக்கலாம்- தெரிந்துகொள்ளுங்கள்..!!

Published : Jan 21, 2023, 02:35 PM IST
பாலிலுள்ள கலப்படத்தை இப்படியும் கண்டுப்பிடிக்கலாம்- தெரிந்துகொள்ளுங்கள்..!!

சுருக்கம்

உணவுப் பாதுகாப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், பாலிலும் கலப்படங்கள் சேர்க்கப்படுவதாக வரும் தகவல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.   

சமீபத்தில் கேரளாவில் லிட்டர் கணக்கில் கலப்பட்ட பாலை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த கலப்பட பாலை அதிகாரிகள் அழித்துவிட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த கலப்பட பால் மாநில எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில், பால்வள மேம்பாட்டுத் துறையினர் பாலை கைப்பற்றி ஆய்வகத்தில் சோதனை செய்தனர். இதன் மூலம் பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது. பாலில் கலப்படம் உள்ளதா என்பதை நம்மால் உடனடியாக கண்டறிய முடியாமல் போகலாம். ஆனால் வீட்டில் சில சோதனை மேற்கொள்வதன் மூலம் பாலின் தரத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் பாலில் கலப்படத்தை ஓரளவுக்கு கண்டறிய முடியும் என 'இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்' தெரிவித்துள்ளது. அதன்படி எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி, கலப்படை கண்டறிவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.

முதல் செயல்முறை

மிகவும் சுத்தமான, சாய்வான மேற்பரப்பில் ஒரு துளி பால் வைக்கவும். சுத்தமான பாலாக இருந்தால், அது மெதுவாக சாய்வாகப் பாயும். அது கசியும் போது, ​​பால் கறை இருக்கும். ஆனால் அது சீக்கிரம் வடிந்து கறை படியாமல் இருந்தால், பால் மாசுபட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது செயல்முறை

ஐந்து முதல் பத்து மில்லி பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். பாலில் சோப்பு, தயிர் போன்ற அசுத்தங்கள் இருந்தால், அது தானாக வெளியே வந்து மிதக்கும். சுத்தமான பாலாக இருந்தால், பேஸ்டு போல ஆகிவிடும். ஆனால் இது சற்று நேரம் பிடிக்கும் செயல்முறையாகும். 

இதையும் படிங்க: தினமும் சோயா பால் அருந்துவதால்.. தலை முதல் பாதம் வரை கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

மூன்றாவது செயல்முறை

மூன்று மில்லி பாலை சூடாக்கவும், அதை அளவில் தண்ணீரையும் சேர்த்துக்கொள்ளவும். இப்போது அதை குலுக்கி அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு அயோடின் டிஞ்சர் சேர்க்கவும். இந்த நேரத்தில், அதில் நீல நிறத்தைப் பார்த்தால், பால் கறை படிந்திருப்பது தெரியும். இதே செயல்முறையை பனீர் உள்ளிட்ட பால் பொருட்களின் தரத்தை அறியவும் பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க: அசைவ உணவுகளால் எலும்பு பாதிக்குமா? நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!