உடற்சூட்டை தணிக்க "இளநீர் சூப்" செய்வோம் வாங்க!

By Dinesh TGFirst Published Nov 27, 2022, 12:28 PM IST
Highlights

இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் வைத்து இளநீர் சூப் சுலபமாகவும், சுவையாகவும் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மழை மற்றும் பனிக்காலங்களில் மாலை நேரங்களில் டீ , காபி அருந்துவதற்கு பதிலாக சூப் செய்து அருந்தினால் தொண்டைக்கு இதமாக இருக்கும். சூப்பில் வெஜ் சூப், சிக்கன் சூப், ஆட்டுக்கால் சூப், மஷ்ரும் சூப், கார்ன் சூப் என்று பல விதமான சூப் வகைகள் இருக்கின்றன. 

அந்த வகையில் இன்று நாம் ருசியான மற்றும் டிஃபரென்ட்டானா ஒரு சூப் ரெசிபியை காண உள்ளோம். வழக்கமாக இளநீர் வைத்து பாயசம், ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். 

இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் வைத்து இளநீர் சூப் சுலபமாகவும், சுவையாகவும் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ருசித்து குடிப்பார்கள்.மழை பெய்யும் நேரத்தில் இப்படி ஒரு ருசியான சூப் செய்து சுவைத்து மகிழுங்கள். வாங்க! இந்த சூப்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இளநீர் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

இளநீர் – 1
கேரட் – 1/2 
பீன்ஸ் – 2
காய்ச்சிய கெட்டியான பால் – 2 ஸ்பூன் 
எண்ணெய் – 1 ஸ்பூன் 
மிளகு தூள்-தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு.

ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு சுவையான சுண்டல் சாட் செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து பால் ஊற்றி கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கேரட்டை அலசி விட்டு துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பீன்ஸை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இளசான ஒரு இளநீரை வாங்கிக் கொண்டு, அதனை வெட்டி , கஞ்சியையம் (வழுக்கை),இளநீரையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இளநீர் கஞ்சியை, சிறிது எடுத்து, இளநீர் கொஞ்சம் ஊற்றி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு, சூடு செய்ய வேண்டும். எண்ணெய் காய்ந்த பின் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு ,அதில் அரைத்து வைத்துள்ள இளநீர் கஞ்சியை சேர்த்து சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து மீதமுள்ள இளநீர் சேர்க்க வேண்டும். 

பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கொஞ்சம் கொதித்த பிறகு, காய்ச்சிய கெட்டியான பாலை ஊற்றி கிளறி விட வேண்டும். அவ்ளோதான்,சூப்பரான ருசியில் ‘இளநீர் சூப்’ ரெடி!

click me!