கிட்ஸ்களின் பேவரைட் “டோனட்” செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Nov 25, 2022, 4:49 PM IST

இன்று நாம் சூப்பரான க்ளேஸ்ட் டோனட் (Glazed Donut ) வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.


குழந்தைகள் மிகவும் பிடித்து விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபிகளில் ஒன்று டோனட். டோனட்டில் சாக்லேட் டோனட் , கோகனட் டோனட் , ஸ்ட்ராபெர்ரி டோனட்,ஜெல்லி டோனட் , ப்ளூ பெர்ரி டோனட், சுகர் டோனட் என்று இன்னும் அதன் விதங்கள் நீண்டு கொண்டே செல்லும். 

அந்த வகையில் இன்று நாம் சூப்பரான க்ளேஸ்ட் டோனட் (Glazed Donut ) வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்

மைதா -300 கி
பட்டர் – 1/4 கப்
தண்ணீர் – 300 மில்லி 
சர்க்கரை – 1 ஸ்பூன் 
ஈஸ்ட் – 1 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு 

க்ளேஸ்ட்(Glazed) செய்ய:

பட்டர் – 100கி 
சக்கரை – 50கி 
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன் 
பால் –1/4 கப் 

சுட சுட கார்ன் சீஸ் டோஸ்ட் செய்வோம் வாங்க!

செய்முறை:

ஒரு சின்ன கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். (சிறிது நேரத்தில் ஈஸ்ட் உப்பி வரும் ). 

ஒரு பெரிய பௌலில் மைதா மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்துக் கொண்டு,உருக்கிய பட்டர் மற்றும் உப்பி வந்துள்ள ஈஸ்ட் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.பிசைந்த பின்னர், ஒரு ஈரத்துணியை வைத்து மாவினை சுமார் 2 மணி நேரங்கள் வரை மூடி விட வேண்டும். 

2 மணி நேரம் கழித்து மாவினை ஒரு சப்பாத்தி கட்டையால் தேய்த்து விட வேண்டும்.ஒரு பெரிய விலாசமான தட்டில் சிறிது எண்ணெய் தடவி, அதில் மாவினை வைத்து மீண்டும் ஈரத்துணி போட்டு மூடி 20 நிமிடங்கள்ஊற வைக்க வேண்டும்.

20 நிமிடங்களுக்கு பிறகு, மாவினை கொஞ்சம் எடுத்து சப்பாத்தி கல்லில் தேய்த்து 1/2 இன்ச் தடிமத்தில் வட்ட வடிவில் செய்து கொள்ள வேண்டும். பின் நடுவில் ஒரு துளை போட வேண்டும். 

இதே மாதிரி அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும்.பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, ஒவ்வொரு டோனட்டையும் சேர்த்து,கொஞ்சம் உப்பி வரும் போது திருப்பி போட்டு பொரித்து எடுத்துக் கொண்டு, எண்ணெய் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது Glaze செய்ய ஒரு பவுலில் பட்டர் ,வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கொண்டு கொஞ்சம் மிக்ஸ் செய்த பிறகு அதில் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இந்த கலவையில் பொரித்து எடுத்து வைத்துள்ள டோனட் ஒவ்வொன்றாக எடுத்து இருபுறமும் டிப் செய்து விட்டு 1 கூலிங் ரேக்கில் வைத்து ஆற வைத்து எடுத்தால் க்ளேஸ்ட் டோனட் ரெடி!!
 

click me!