வழக்கமாக அரிசி மாவு,வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள். ஆனால் இன்று நாம் வெறும் ரவையை மட்டும் சேர்த்து காரசாரமான குழி பணியாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலம் ,மழைக்காலம் போன்றக் காலங்களில் மாலை நேரங்களில் காபி, டீயுடன் சூடாக ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு மாலை நேர சிற்றுண்டி ரெசிபியை தான் காண உள்ளோம்.
வழக்கமாக அரிசி மாவு,வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள். ஆனால் இன்று நாம் வெறும் ரவையை மட்டும் சேர்த்து காரசாரமான குழி பணியாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
தேவையான பொருட்கள்:
ரவை –1 கப்
தயிர் – 1/2 கப்
கேரட் – 2
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் –2
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு –1 ஸ்பூன்
சோடா உப்பு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை –கையளவு
எண்ணெய் --தேவையான அளவு
க்ரிஸ்பி கோபி 65 செய்து சாப்பிடலாம் வாங்க!
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, சீரகம் மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து பின் அதில் அரிந்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் வதங்கிய பின்னர், துருவிய கேரட் சேர்த்து கிளறி விட்டு ,பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் வதக்கி விட வேண்டும். இப்போது
ரவை சேர்த்து கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை கிளறி விட்டு, பின் அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.பின் இதனில் தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து,10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
பத்து நிமிடங்கள் கழித்து சிறிது சோடா உப்பு,கறிவேப்பிலை,மல்லித் தழை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குழிப்பணியாரக் கல் வைத்து, லேசாக எண்ணெய் விட்டு,கல்லை சூடாக்க வேண்டும். கல் சூடான பின்பு ,ஒவ்வொரு குழியிலும் ரெடியாக உள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சிறிது எண்ணெய் விட வேண்டும். ஒரு பக்கம் வெந்த பிறகு மறு பக்கம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு,வேக வைத்து எடுத்தால் சூப்பரான ரவை குழிப்பணியாரம் ரெடி!!!
இதற்கு தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்