வாருங்கள்! சூப்பரான சுவையில் இருக்கும் சோயா பீன்ஸ் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக அளவில் நார்சத்து மற்றும் ப்ரோட்டீன் போன்ற சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வழக்கமாக நாம் ஒரு சில காய்கறிகளை மீண்டும் மீண்டும் சமைப்பதால் வீட்டில் உள்ளவர்கள் வேறு ஏதேனும் சமைத்து தரும்படி கேட்பார்கள். அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.
இன்று நாம் ப்ரோட்டீன் சத்து அதிகமாக காணப்படும் சோயா பீன்ஸ் வைத்து சுவையான சோயா பீன்ஸ் மசாலா ரெசிபியை காண உள்ளோம். இதனை தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் சிறிது நெய் மற்றும் இந்த மசாலாவை சேர்த்து பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! சூப்பரான சுவையில் இருக்கும் சோயா பீன்ஸ் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் சோயாவை உறித்து அதனை அலசி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் சூடான பின் அதில் சீரகம் சேர்த்து பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தாக பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது அலசி வைத்துள்ள சோயாவை சேர்த்து கொஞ்சம் நிறம் மாறும் வரை தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.
இப்போது சிக்கன் மசாலாவைச் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். (மசாலாவில் உப்பு இருப்பதால் உப்பு தேவைப்பட்டால் மட்டும் சேர்க்க வேண்டும்).1 பின் கப் தண்ணீர் ஊற்றிக் கொண்டு மூடி விட்டு 3 விசில் வைக்க வேண்டும்.
3 விசில் வந்வுடன் அடுப்பை ஆஃப் செய்து விட்டு விசில் அடங்கிய பிறகு, குக்கரை திறந்து பார்த்து மீண்டும் அடுப்பில் குக்கரை வைத்து தண்ணீர் முழுவதும் வற்றும் வரை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
மசாலா வற்றி கெட்டியாக வந்த பின் சிறிது நெய் மற்றும் மல்லித்தழை சேர்த்து கிளறி பரிமாறினால் சூப்பரான சுவையில் சோயா பீன்ஸ் மசாலா ரெடி!. இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எதனை தட்டு சாதம் சாப்பிட்டோம் என்றே தெரியாது.