Sooji Muruku : ரவை சேர்த்து மொறுமொறுப்பான முறுக்கு செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Nov 29, 2022, 4:17 PM IST

இன்று நாம் ரவை வைத்து மொறுமொறுவென முறுக்கு செய்ய உள்ளோம்.இந்த முறுக்கை பத்து நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம்.


வழக்கமாக முறுக்கு போன்ற திண்பண்டங்களை பெரும்பாலும் அரிசியை பிரதானமாக வைத்து செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் கொஞ்சம் டிஃபரெண்டாக ரவை வைத்து க்ரிஸ்பியான முறுக்கை சுலபமாக சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

என்னது ரவையில் முறுக்கா! என்று யோசிக்கிறீர்களா? ரவை வைத்து போண்டா,தோசை,பணியாரம், உப்புமா என்று பல விதமான ரெசிபிஸ் செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் ரவை வைத்து மொறுமொறுவென முறுக்கு செய்ய உள்ளோம்.இந்த முறுக்கை பத்து நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
வெண்ணெய் – 3 ஸ்பூன்
எள்ளு – 2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு

Minced Meat Samosa : வீடே மணக்கும் மட்டன் கீமா சமோசா!

செய்முறை:

ரவை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு, அதே கப்பில் அரிசி மாவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது,அடுப்பின் தீயினை மிதமான சூட்டில் வைத்து, எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கை விடமால் கிளறி விட வேண்டும். 

ரவை கொஞ்சம் கெட்டியாகி வரும் பொழுது , வெண்ணெய் சேர்த்து தொடர்ந்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். ரவை கடாயில் ஒட்டாத வண்ணம் கவனமாக கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். ரவை நன்றாக வெந்து வந்த பிறகு, அடுப்பை ஆஃப் செய்து விட்டு ரவையை தனியாக ஒரு கிண்ணத்திலோ அல்லது தட்டிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். 

ரவை கொஞ்சம் ஆறிய பிறகு, அதில் அரிசி மாவு மற்றும் எள்ளு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். தேவையென்றால் சிறிது நெய் அல்லது உருக்கிய வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். முறுக்கு சுடும் அளவிற்கு மாவை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் பெரிய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். முறுக்கு அச்சின் உள்ளே சிறிது எண்ணெய் தடவி விட வேண்டும். கையில் கொஞ்சம் மாவை எடுத்து முறுக்கு அச்சின் உள்ளே வைத்து கரண்டிகளில் முறுக்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் கொதிக்கும் எண்ணெயில் கரண்டிகளில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை போட்டுக் கொண்டு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் முறுக்குகளை பக்குவமாக பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க!.அருமையான ரவை முறுக்கு ரெடி!!. அனைத்தும் சுட்ட பிறகு, காற்று புகாத ஒரு டப்பாவில் எடுத்து வைத்தால் 10 நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். 

click me!