வாருங்கள்! மொறுமொறுவென ரிங் முறுக்கு ரெசிபியை வீட்டில் எப்படி ஈஸியாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை காண உள்ளோம். முறுக்கு, சேவு, மிக்ஸர்,காரா பூந்தி என்று பல விதமான ஸ்னாக்ஸ் வகைகளை குழந்தைகளும் சரி, இளைஞர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் முறுக்கு வகைகளில் ஒன்றான ரிங் முறுக்கு ரெசிபியை செய்ய உள்ளோம். இதன் சுவை மொறு மொறு வென்று இருப்பதால் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை ஒரு முறை வீட்டில் செய்தால் 1 வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். வீட்டில் கெஸ்ட் வந்து அவர்கள் வீடு திரும்பு போது அவர்களுக்கு இதனை செய்து கொடுத்து அனுப்பலாம்.
வாருங்கள்! மொறுமொறுவென ரிங் முறுக்கு ரெசிபியை வீட்டில் எப்படி ஈஸியாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:\
undefined
மதியம் லஞ்சுக்கு சூப்பரான சைட் டிஷ்- கல்யாண வீட்டு "வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்"!
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் ஓமம், சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள், மற்றும் நெய் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும் போது அதில் பச்சரிசி மாவை போட்டு கரண்டியால் கிளறி விட வேண்டும்.
பின் அதனை கைகளால் சாஃப்ட்டாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த பின் சுமார் 1/2 மணி நேரம் வரை மாவினை அப்படியே வைத்து விட வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு, மாவினை கையில் கொஞ்சம் எடுத்து ஒரே மாதிரியான அளவில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உருண்டைகளை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொண்டு பின் ஒரே மாதிரி வளையம் போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் முறுக்கு வளையங்களை போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொறுமொறுவென ரிங் முறுக்கு ரெடி!