மதியம் லஞ்சுக்கு சூப்பரான சைட் டிஷ்- கல்யாண வீட்டு "வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்"!

By Asianet Tamil  |  First Published Feb 7, 2023, 5:49 PM IST

வாருங்கள்! சுவையான கல்யாண வீட்டு வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தினமும் நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகளையும்,கீரைகளையும் அதிகளவில் எடுத்துக் ஆரோக்கியமான ஒரு வாழ்வை நம்மால் வாழ முடியும். பொதுவாக நம்மில் பெரும்பாலும் ஒரே மாதிரியான காய்கறிகளை ஒரே விதங்களில் செய்து சாப்பிட்டு அலுத்து போய் இருப்போம். அப்படி அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு உதவி
புரியும்.இன்று நாம் வாழைக்காய் வைத்து சுவையான ஒரு ரெசிபியை காண உள்ளோம்.

பொதுவாக வாழைக்காய் வைத்து பொரியல்,கூட்டு,புட்டு,வறுவல் போன்றவை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் கல்யாண வீட்டு ஸ்டைலில் வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் .செய்ய உள்ளோம். இதனை சாம்பார் சத்தம், ரசம் சாதம் ,தயிர் சாதம் போன்றவைகளுக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

வாருங்கள்! சுவையான கல்யாண வீட்டு வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

தேவையான பொருட்கள்:

  • வாழைக்காய் - 2
  • கடுகு - 1 ஸ்பூன்
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • மிளகாய் தூள் - 1/2ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

Latest Videos

undefined

அரைக்க :

  • மிளகு - 3 ஸ்பூன்
  • பூண்டு - 4பற்கள்
  • இஞ்சி - 1/2 இன்ச்
  • தேங்காய் - 2 ஸ்பூன் (துருவியது)

இனிமே சப்பாத்தி என்றால் மீல் மேக்கர் மசாலா தான் செய்வீங்க!

செய்முறை:
முதலில் வாழைக்காயின் தோலை எடுத்துக் கொண்டு, அதனை ஒரே மாதிரியான அளவில் நீட்ட நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் வாழைக்காயைப் சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெந்த வாழைக்காயினை தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் மிளகு,பூண்டு,இஞ்சி, தேங்காய் ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து பின் அதில் ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கிளறிக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக அதில் அரைத்த பேஸ்ட் சேர்த்து, உப்பு சரி பார்த்துக் கொண்டு (தேவையெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும்) கிளறி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து, தட்டு போட்டு மூடி 2 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி பறிமாறினால் சுவையான கல்யாண வீட்டு வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெடி!

click me!