பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு ஹெல்த்தி ஸ்னாக்ஸ் !! இப்படி செய்து கொடுங்க!

By Dinesh TGFirst Published Dec 22, 2022, 4:33 PM IST
Highlights

வாருங்கள்!ருசியான அரிசி லட்டு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

பள்ளி முடித்து சோர்ந்து வரும் குழந்தைகளுக்கு இந்த லட்டு செய்து கொடுத்தால், அவர்கள் இதனை சாப்பிட்டு உற்சாகமாக இருப்பார்கள். வழக்கமாக நாம் மாலை நேரத்தில் செய்கின்ற புட்டு, வடை, கொழுக்கட்டை போன்றவற்றை போல் இல்லாமல் இந்த லட்டினை ஒரு முறை செய்து பாருங்கள். 

அரிசி மற்றும் வெல்லத்தை சேர்த்து செய்யப்படும் இந்த லட்டினை பக்குவமாக செய்து ஒரு ஏர் டைட் ஜாரில் போட்டால் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.  வாருங்கள்!ருசியான அரிசி லட்டு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி- 1 கப் 
வெல்லம் -1 கப் 
வேர்க்கடலை-1/4 கப் 
தேங்காய் துருவல்-1 கப் 
பாதாம் பருப்பு-10
ஏலக்காய்-2 
நெய்-4 ஸ்பூன் 

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வீட்டில்லேயே செய்து கொண்டாடலாம் வாங்க!

செய்முறை:

முதலில் பச்சரிசியை நன்றாக தண்ணீரில் அலசி விட்டு , பின் நிழலில் உலர்த்தி கொள்ள வேண்டும். தேங்காய் மற்றும் வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு கடாய் வைத்து , தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு அரிசியினை சேர்த்து 3 நிமிடங்கள் வரை வறுத்துக் கொண்டு, அரிசியினை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே கடாயில் நிலக்கடலை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை ஆற வைத்துக் கொண்டு, பின் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதே மிக்சி ஜாரில் வறுத்த நிலக்கடலை, பாதம் பருப்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் இந்த பொடியை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், துருவிய வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை அரைத்து வைத்துள்ள அரிசி மாவினில் சேர்த்து கொஞ்சம் (2 ஸ்பூன்) நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் பிசைந்த இந்த மாவினில் இருந்து கொஞ்சம் எடுத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொண்டு மீண்டும் இதே கலவையில் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 

இப்பொழுது கையில் சிறிது நெய் தடவி விட்டு, மாவினை கையில் எடுத்து ஒரே அளவிலான உருண்டைகளை செய்து எடுக்க வேண்டும். அவ்ளோதான்! ஈஸி,டேஸ்ட்டி அண்ட் ஹெல்த்தியான லட்டு ரெடி!

click me!