கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் - "சாக்லேட் ஸ்பான்ஜ் கேக்" செய்து ஆனந்தமாய் கொண்டாடலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 22, 2022, 1:18 PM IST

வாருங்கள்! சுவையான சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்கை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இன்னும் சில தினங்களில் உலகம் முழுதும் கொண்டாடப்படும் பண்டிகையான கிறிஸ்துமஸ் திருநாள் வரவுள்ளது. வழக்கமாக நாம் கிறிஸ்துமஸ்க்காக வெளியில் சென்று கடைகளில் இருந்து தான் கேக் வாங்கி வந்து சுவைத்து இருப்போம். இந்த முறை சற்று மாற்றாக நாமே நமது வீட்டில்நம் கை பக்குவத்தில் கேக் செய்து தரலாமா!

கேக்கில் பல விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விதமும் ஒரு வகையான சுவையை தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் சுவையான கேக் ஒன்று செய்ய உள்ளோம். 

Latest Videos

undefined

இந்த கேக்கினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும்.அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு பிலேவரான சாக்லெட் பிளேவரில் தான் கேக் செய்ய உள்ளோம். இது மிகவும் சாஃப்டாக இருக்கும்.மேலும் வாயில் போட்டவுடன் கரைந்து விடும் அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். 

வாருங்கள்! சுவையான சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்கை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
பட்டர் - 1/4 கப் 
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
கோக்கோ பவுடர் - 1 ஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன் 
தண்ணீர் - 1/4 கப் 

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வீட்டில்லேயே செய்து கொண்டாடலாம் வாங்க!

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் புளித்த தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இன்னொரு கிண்ணத்தில் மைதா மற்றும் கோக்கோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பௌலில் தண்ணீர் சேர்த்து அதனை மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் வைத்து சூடேற்றி கொண்டு இறக்கி வைக்க வேண்டும். பின் அந்த சூடான தண்ணீரில் சர்க்கரை மற்றும் உருக்கிய பட்டர் ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். 

அடுத்தாக அதில் மைதா கோக்கோ கலவை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொண்டு பின்பு அதில் தயிர் பேக்கிங் சோடா கலவை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சாஃப்டாக கிளறிக் கொள்ள வேண்டும். 

பின் பேக்கிங் டின்னில் அல்லது ட்ரேயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதனை ஸ்ப்ரெட் செய்து கொள்ள வேண்டும்.பின் அதில் தயார் நிலையில் இருக்கும் மாவினை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து விட வேண்டும். 

ஓவனில் 4 நிமிடங்கள் வரை கேக் டின்னை வைத்து பேக் செய்து இறக்கி விட வேண்டும். பின் அதனை வெளியே எடுத்து ஆறிய பிறகு பரிமாறினால் ருசியான சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் ரெடி

click me!