சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் "சிவப்பு அரிசி ஆப்பம்"! செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 11:41 AM IST

 சிவப்பரிசி வைத்து ருசியான ஆப்பம் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய நவீன உலகத்தில் நாம் அனைவரும் ஒய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்வதால் , எளிதில் செய்யக் கூடிய உணவு அல்லது துரித உணவுகள் என்று சாப்பிட்டு இருக்கின்றோம். இம்மாதிரியான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நாம் பல விதமான உடல் உபாதைகளை சந்திக்கின்றோம். அதில் ஒன்று தான் சர்க்கரை வியாதி எனப்படும் நீரழிவு நோய். 

இந்த நீரழிவு நோய் அல்லாது மற்ற நோய்களையும் வராமல் தடுக்க அல்லது நோயிகளை கட்டுகள் வைத்துக் கொள்ள நாம் உண்ணும் உணவுகளை ஊட்ட சத்து மிகுந்ததாக எடுத்துக் கொண்டாலே போதும். 

Tap to resize

Latest Videos

அப்படி ஊட்ட சத்து நிறைந்த தானியங்களில் ஒன்றான சிவப்பு அரிசி வைத்து ஒரு ரெசிபியை தான் இன்றைய பதிவில் காண உள்ளோம். 

சிவப்பரிசியில் குறைந்த அளவு கார்போஹைரேட் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மேலும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு என்பதால் இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவாகும். அது தவிர உடல் எடை குறைக்க விருப்புவோர், இதனை உணவில் எடுத்துக் கொண்டால்,கொழுப்புகளை கரைத்து உடல் எடையை எளிதில் குறைக்கலாம். மேலும் இது புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. 

இவ்வளவு நன்மைகளை வழங்கும் சிவப்பரிசி வைத்து ருசியான ஆப்பம் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 2 கப்
உளுந்து -1 ஸ்பூன் 
வெந்தயம் - 1/2 ஸ்பூன் 
வெல்லம் - 50 கிராம் 
உப்பு - தேவையான அளவு 

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வேர்க்கடலை குழம்பு!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசியை போட்டு நன்றாக அலசி பின் அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே பாத்திரத்தில் உளுந்து சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று வெல்லத்தையும் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். 

4 மணி நேரம் சென்ற பிறகு,அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி பின் கிரைண்டரில் அரிசியை போட்டு அதில் வெல்லம், தேங்காய் துருவல், உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் 7 மணி நேரம் வரை வைத்து புளிக்க வைக்க வேண்டும் 

அடுப்பில் 1 ஆப்ப கடாய் வைத்து மாவை ஊற்றி நன்கு பரப்பி விட வேண்டும். பின் மூடி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து மூடியை திறந்து எடுத்தால் சுவையான சிவப்பரிசி ஆப்பம் ரெடி!! 

click me!