Rasagulla : ரம்மியமான ரசகுல்லா செய்வது எப்படி?

By Dinesh TGFirst Published Oct 4, 2022, 4:08 PM IST
Highlights

அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் பட்டியலில் நிச்சயம் ரசகுல்லாவும் ஒன்றாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் பொதுவாக வீட்டில் ரவா லட்டு, கேசரி , ரவை அப்பம் , க்ளோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை தான் அதிகம் செய்திருப்போம். இதனை தவிர வேற இனிப்புகள் எனில் வெளியில் உள்ள கடைகளில் தான் வாங்குவோம். ரசகுல்லா ,ரச மலாய் போன்ற இனிப்பு வகைகளை கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைப்போம். 

அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் பட்டியலில் நிச்சயம் ரசகுல்லாவும் ஒன்றாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

1/2 லிட்டர் - பால் 
3/4 கப் -சர்க்கரை
3/4 கப்- தண்ணீர் 
4- ஐஸ் கட்டிகள்
3- பிஸ்தா
1 1/2 ஸ்பூன் - லெமன் ஜூஸ்
1 சிட்டிகை -ஏலக்காய் பொடி

சத்தான தினை அரிசி தக்காளி சாதம்! செய்யலாம் வாங்க!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும், பால் கொதிக்கும் தருவாயில்,சிறிது லெமன் ஜுஸ் சேர்க்க வேண்டும். இப்போது பால் திரிவதை பார்க்க முடியும். திரியும் பாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அடுப்பை ஆப் செய்து விட்டு, ஐஸ் கட்டிகளை பாலில் சேர்க்க வேண்டும்.

ஐஸ் கட்டிகள் உருகிய பின்,மஸ்லின் துணியில் பாலை ஊற்றி நீர் இல்லாமல் வடிகட்ட வேண்டும். இப்போது மஸ்லின் துணியில் இருக்கும் பாலை லெமன் வாசனை போகும் வரை ஓடும் நீரில் நன்றாக அலச வேண்டும்.

பின் துணியை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து அரை மணி நேரம் தனியாக வைத்திருக்க வேண்டும். அதன் பின் துணியில் இருக்கும் திரிந்த பாலை 1 ப்லேட்டில் எடுத்துக் கொண்டு பிசைய வேண்டும்.

கசப்பில்லாமல் பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?

பிறகு பிசைந்த (மாவு போல் உள்ள) பாலை சிறிய உருண்டைகளாக பிடித்து தனியே வைத்துக் கொள்ளவும்.ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும். 

சர்க்கரை பாகில் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு, தீயை சிம்மில் வைத்து 3 நிமிடம் வேக விட்டு,பின் தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். 

பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தில் இருக்கும் உருண்டைகளை ஆற வைத்து விட்டு , மேற்பரப்பில் பிஸ்தாவை தூவினால், ரம்மியமான ரசகுல்லா ரெடி!!

click me!