பல விதமான கச்சோரிகள் இருந்தாலும் கஸ்தா கச்சோரி தான் மிக பிரபலமான மற்றும் சுவையானதாகும் . இன்று நாம் கஸ்தா கச்சோரி எனப்படும் பாசிப்பருப்பு கச்சோரியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கச்சோரி என்பது வடஇந்தியாவின் குறிப்பாக டெல்லி மற்றும் ராஜஸ்தானின் பிரபலமான ஸ்னாக்ஸ் வகையை சார்ந்தது.இது சமோசாவைப் போன்ற ஒரு ஸ்னாக்ஸ் என்றும் கூறலாம். சாலையோரங்களில் உள்ள கடைகளில் கிடைக்கும் இந்த கச்சோரியை பல விதமான ஸ்டபிங்ஸை உள் வைத்து செய்யலாம்.
பட்டாணி கச்சோரி,பாசிப்பருப்பு கச்சோரி(கஸ்தா கச்சோரி), உருளைக்கிழங்கு கச்சோரி, வெங்காய கச்சோரி,பன்னீர் கச்சோரி என பல வகையான கச்சோரி உள்ளன.பல விதமான கச்சோரிகள் இருந்தாலும் கஸ்தா கச்சோரி தான் மிக பிரபலமான மற்றும் சுவையானதாகும் . இன்று நாம் கஸ்தா கச்சோரி எனப்படும் பாசிப்பருப்பு கச்சோரியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
கச்சோரி செய்ய தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 1/2கப்
கோதுமை மாவு- 1கப்
ஓமம்- 1/2 ஸ்பூன்
பட்டர்- 2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
பெண்களே உங்கள் கண்களுக்கு மேக்கப் போடும் போது இதை கொஞ்சம் கவனிங்க!
பூரணம் செய்யவதற்கு:
பாசிப்பருப்பு- 1 1/2கப்
இஞ்சி- 1/2 துண்டு
பச்சை மிளகாய்- 3
சோம்பு-1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
தனியா தூள்- 1ஸ்பூன்
சீரகத்தூள்- 1ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்
கடுகு- 1/2 ஸ்பூன்
பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, ஓமம், பட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். உருண்டைகள் ட்ரய் ஆகாமல் இருப்பதற்கு அவை மீது சிறிது எண்ணெய் தடவி சுமார் இருபது நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
கச்சோரி செய்வதற்கு பாசிப்பருப்பை 2 மணிநேரம் முன்பாக ஊற வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் இஞ்சி, சீரகம், சோம்பு, மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து கொண்டு, பின் அதனுடன் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை நீர் இல்லாமல் வடிகட்டி அதனை மிக்சி ஜாரில் எடுத்துக்கொண்டு கொர கொரவென்று அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள், மஞ்சள் தூள்,பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பாசிப்பருப்பு உதிரி உதிரியாக வரும் வரை, வதக்க வேண்டும்.
பிசைந்து ஊறவைத்துள்ள மாவின் மீது, சிறிது சூடான எண்ணெய் விட்டு மீண்டும் நன்றாக பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொண்டு பின் அதனை சிறிய பூரி போல் திரட்டி , அதன் நடுவில் பூரணம் கொஞ்சம் வைத்து மூடிவிட வேண்டும். மீண்டும் 2 பக்கமும் கைகளால் நன்றாக அழுத்தி விட வேண்டும்.
Carrot Chutney : இதய நோய் வராமல் பாதுக்காக்க ஆரோக்கியமான கேரட் சட்னி!
அடுப்பில் கடாய் வைத்து போதுமான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றி , பூரிகளை இரு புறமும் பொரித்து எடுக்க வேண்டும்.
ஆரோக்கியமான ,சுவையான, பாசிப்பருப்பு கச்சோரி எனப்படும் கஸ்தா கச்சோரி தயார்! இதற்கு டொமேட்டோ கெட்சப் மற்றும் க்ரீன் சட்னி வைத்து சாப்பிட்டால் மேலும் சுவை கூடுதலாக இருக்கும்.
நீங்களும் இந்த ஆரோக்கியமான கச்சோரியை ஒரு முறை முயற்சி செய்து பாருங்க!