Chicken Poriyal : காய்கறி பொரியல் தெரியும்? இது என்ன சிக்கன் பொரியல்?

By Dinesh TG  |  First Published Oct 4, 2022, 1:55 PM IST

நாம் அனைவருக்கும் பொரியல் என்றவுடன் பீன்ஸ் பொரியல், கோஸ் பொரியல், உருளை பொரியல் என பல வகை காய்காறிகளை வைத்து செய்யும் பொரியல் தான் தெரியும். ஆனால் மட்டன் அல்லது சிக்கனில் நன்கு வதக்கிய வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து பொரியல் செய்துள்ளீர்களா? சிக்கன் பொரியல் எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க!
 


நாம் அனைவருக்கும் பொரியல் என்றவுடன் பீன்ஸ் பொரியல், கோஸ் பொரியல், உருளை பொரியல் என பல வகை காய்காறிகளை வைத்து செய்யும் பொரியல் தான் தெரியும். ஆனால் மட்டன் அல்லது சிக்கனில் நன்கு வதக்கிய வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து பொரியல் செய்துள்ளீர்களா? சிக்கன் பொரியல் எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க!

தேவையான பொருட்கள் :

Tap to resize

Latest Videos

1/2 கிலோ -சிக்கன்
1/4 ஸ்பூன்- மஞ்சள் தூள்
தேவையான அளவு - உப்பு
மல்லி தழை (பொடியாக நறுக்கியது)

சூப்பரான வெஜிடேபிள் பட்டர் நாண்! எப்படி செய்வது? பார்க்கலாம் வாங்க!

மசாலா அரைப்பதற்கு:
1 ஸ்பூன் -மிளகு 
6 பல்- பூண்டு 
2- வர மிளகாய்
1/2 கப் - துருவிய தேங்காய்
1- வெங்காயம் (மீடியம் சைஸ் )

தாளிப்பதற்கு:
2 ஸ்பூன்- எண்ணெய் 
1 ஸ்பூன் -கடுகு
1 கொத்து - கறிவேப்பிலை 
1- வெங்காயம்

செய்முறை :

முதலில் பெரிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக அரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 விசில் வைத்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி சளிப் பிடிக்குதா? மழைக்காலத்திற்கு ஏற்ற இந்த குழம்பு தான் உங்களுக்கு பெஸ்ட்!

பின் மிக்சி ஜாரில் மிளகு, பூண்டு, வர மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் வெங்காயம் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொர கொரவென அரைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் கொஞ்சம் தண்ணர் சேர்த்து ஒரு கடாயில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

மசாலா கொதிக்க ஆரம்பிம்பிக்கும் போது வேக வைத்து எடுத்துள்ள சிக்கனை போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.அடுப்பின் தீயை மிதமாக வைத்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். 

அடுப்பில் ஒரு Pan வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அவ்வளவு தாங்க சுவையான சிக்கன் பொரியல் தயார்!

click me!