பாரம்பரிய முறையில் ''கம்பு அடை'' செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 2, 2022, 10:13 PM IST

வழக்கமாக நாம் ராகி அடை ,பருப்பு அடை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பாரம்பரிய முறையில் கம்பு வைத்து அடையை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவின் கொள்ளலாம். 


பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று.கம்பு வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தான். 

சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பில் புரதம், இரும்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பு அதிகமாக உள்ளதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அளவினை உயர்த்துகிறது.மேலும் இரத்த சோகைப் பிரச்சனைக்குத் சிறந்த தீர்வை தருகிறது. கம்பு வைத்து கஞ்சி,களி,புட்டு என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் கம்பு வைத்து சுவையான அடை செய்ய உள்ளோம். 

Tap to resize

Latest Videos

வழக்கமாக நாம் ராகி அடை ,பருப்பு அடை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பாரம்பரிய முறையில் கம்பு வைத்து அடையை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவின் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப்
கடலை பருப்பு – 1 கப்
உளுந்து – 1/2 கப்
பச்சரிசி – 1 கப்
வர மிளகாய் – 5
சீரகம் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – கையளவு 
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை 
எண்ணெய் – தேவையான அளவு 
உப்பு-தேவையான அளவு 

கும்பகோணம் கடப்பா இப்படி செய்து பாருங்கள்! - சுவையோ சுவை!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மற்றும் பச்சரிசி போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மற்றொரு பாத்தரித்தில் உளுந்து மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி அதனையும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

கடலை பருப்பு, உளுந்து, அரிசி மற்றும் கம்பு நன்றாக ஊறிய பிறகு, அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் கிரைண்டரில் அனைத்தையும் சேர்த்து அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்தது மாவை நன்றாக கலக்கி விட்டு கிட்டதட்ட 6 மணி நேரம் வரை வைத்து விட வேண்டும். 6 மணி நேரத்திற்கு பிறகு,மாவு நன்றாக புளித்து வந்து இருக்கும்.இப்போது அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சிறிது எண்ணெய் தடவி கல் சூடான பின், மாவினை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு பரிமாறினால் சத்தான கம்பு ரெடி!
 

click me!