மீன் வைத்து என்ன புது ரெசிபி! என்று யோசிக்கிறீர்களா? மீன் பொடிமாஸ் தாங்க இன்று நாம் காண உள்ளோம். என்னங்க! பெயரை சொன்னவுடன் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா?
அசைவ பிரியர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் கடல் உணவான மீனை சொல்லலாம். வழக்கமாக மீன் வைத்து குழம்பு, புட்டு அல்லது வறுத்து சாப்பிட்டு இருப்போம். அதனை தவிர்த்து கொஞ்சம் புதுமையா, வித்தியாசமாக மீன் வைத்து புது ரெசிபி செய்ய வேண்டும் என்று நினைப்பபவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான்.
மீன் வைத்து என்ன புது ரெசிபி! என்று யோசிக்கிறீர்களா? மீன் பொடிமாஸ் தாங்க இன்று நாம் காண உள்ளோம். என்னங்க! பெயரை சொன்னவுடன் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா?
பொதுவாக பொடிமாஸ் என்றால் முட்டை, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கோஸ் போன்றவற்றை வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.கொஞ்சம் வித்தியாசமாக இன்று நாம் மீன் வைத்து சுவையாக பொடிமாஸ் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் ;
மீன்-7 பீஸ்
உப்பு -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
பொடிமாஸ் செய்வதற்கு:
எண்ணெய்-2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மல்லித் தூள் -1/2 ஸ்பூன்
சீரகத் தூள் -1/2 ஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை -கையளவு
உப்பு -தேவையான அளவு
கும்பகோணம் கடப்பா இப்படி செய்து பாருங்கள்! - சுவையோ சுவை!
செய்முறை:
முதலில் மீனை வாங்கி சுத்தம் செய்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 முறை அலசிய பிறகு, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட்டு அதில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த மீன் துண்டுகளை இப்போது ஒரு கடாயில் மாற்றி, பின் கடாயில் மீன்கள் அனைத்தும் நன்றாக முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
மீன் நன்றாக வெந்தபிறகு, அடுப்பை ஆஃப் செய்து விட்டு, கொன்ஜம் ஆறிய பிறகு கடாயில் இருந்து ஒவ்வொரு மீனாக எடுத்து மீனில் இருக்கும் முள்ளை எடுத்து விட்டு, பொடியாக மீனை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, அதில் கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு,பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு, பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு, மிளகாய் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைது மசாலாக்களின் காரத்தன்மை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.
இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள மீன் கறியை சேர்த்து , கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை கிளறி விட்டு, இறுதியாக பொடியாக அரிந்த மல்லித்தழையை சேர்த்து இறக்கினால் வீடே கமகமக்கும் சூப்பரான மீன் பொடிமாஸ் ரெடி!